அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறையை அமல்படுத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் அரசு உதவி பெறும் பள்ளியில் உபரி ஆசிரியர் நியமனத்தை அங்கீகரிக்குமாறு தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கானது, நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது உபரி ஆசிரியர்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உபரி ஆசிரியர்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு ஆண்டுக்கு 444 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைக் கேட்ட நீதிபதிகள், அரசு உதவி பெறும் சிறுபான்மையில்லா மற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் நலன் மற்றும் மக்களின் வரிப்பணம் வீணாவதை தடுக்க சில உத்தரவுகளை பிறப்பிப்பதாக தெரிவித்தனர்.அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த வேண்டும் என அவர்கள் உத்தரவிட்டனர்.
ஒரே நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை நேர் செய்யப்படும் வரை புதிய ஆசிரியர்களை நியமனம் செய்யக்கூடாது எனவும் அவர்கள் உத்தரவு பிறப்பித்தனர்.
உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கையை நேர் செய்வதற்காக தங்களது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பிற பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பலாம் என உத்தரவிட்டு வழக்குவிசாரணையை ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..