புதிய பாடப் புத்தகங்களுக்கான விலையை தமிழ்நாடு பாடநூல் கழகம் நிர்ணயம் செய்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. 
தமிழக அரசுப் பள்ளிகளில் படித்து வரும் மாணவ- மாணவியருக்கான பாடத்திட்டம் புதுப்பிக்கப்பட்டு புதிய பாடப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. அச்சிடும் பணியை தமிழ்நாடு பாடநூல் கழகம் செய்து வருகிறது. கடந்த ஆண்டில் 1, 3, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான புத்தகங்கள் அச்சிட்டு வழங்கப்பட்டன. 
வரும் கல்வியாண்டில் 2, 4, 5, 7, 8, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. புதிய பாடத்திட்டத்தின் கீழ் அச்சிடப்பட்டுள்ள இந்த பாடப் புத்தகங்கள் 80 ஜிஎஸ்எம் தாளில் அச்சிடப்பட்டுள்ளன. அதன்படி 40-52 பக்கங்கள் கொண்ட புத்தகத்துக்கு ரூ.30, 56-72 பக்கம் கொண்டு புத்தகத்துக்கு ரூ.40, 76-92 பக்கம் கொண்ட புத்தகம் ரூ.50, 96-116 பக்கம் கொண்ட புத்தகம் ரூ.60, 120-136 பக்கம் கொண்டு புத்தகம் ரூ.70 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
அதிகபட்சமாக 352 முதல் 368 பக்கங்கள் கொண்ட ஒரு பாடப் புத்தகத்தின் விலை ரூ.180 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here