*மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது*


*தமிழகத்தில், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககத்தின்கீழ் சுமார் 4 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளுக்கு தொடக்க அனுமதியும், மூன்றாண்டுக்கு ஒருமுறை தொடர் அங்கீகாரமும் வழங்கப்பட்டு வந்தது*


 *இந்த நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்குவதற்கான நடைமுறைகளை ஆன்லைன் முறையில் மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டது*


 *இதையடுத்து, 2018 மே மாதம் வெளியிடப்பட்ட பள்ளிக்கல்வித் துறை அரசாணை எண் 101-இல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டன*


 *இதைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர்கள் தற்போது ஆவணங்களைச் சரிபார்த்து தொடர் அங்கீகாரம் அளித்து வருகின்றனர்*


*சில இடங்களில் தொடர் அங்கீகாரம் அளிப்பதில் புகார்கள் வந்தன. அதுபோன்ற புகார்களை முற்றிலும் தடுக்கும் வகையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து அங்கீகாரம் அளிக்கும் முறையை மெட்ரிகுலேஷன் இயக்ககம் அறிமுகம்  செய்துள்ளது. இதனால் பள்ளிகள் தொடர் அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது ஏற்படும் தேவையற்ற காலதாமதம் தவிர்க்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது*




Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here