நியூயார்க்:
பால் ஆல்லென் என்பவர் வானத்தில் பறந்தவாறு ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தும் தொழில்நுட்பத்துடன் உலகின் மிகப்பெரிய விமானம் ஒன்றை தயாரிக்க முடிவு செய்தார்.

இதன் விளைவாக கடந்த 2011-ம் ஆண்டில் 'ஸ்டிராட்டோலான்ச்' என்ற புதிய நிறுவனத்தை பால் ஆல்லென் தொடங்கினார். விமானத்தின் வடிவமைப்பு, கட்டுமானப் பணிகள் முடிந்து சோதனை ஓட்டமாக 4-2019 பறக்க விடுவதற்கு நாள் குறிக்கப்பட்டது.
அதன்படி, கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள மோஜாவே விமானம் மற்றும் விண்வெளி துறைமுகத்தில் இருந்து இந்த 'மெகா' விமானம் புறப்பட்டு சென்றது. மோஜாவே பாலைவனப் பகுதியில் 17 ஆயிரம் அடி உயரத்தில் மணிக்கு 189 மைல் வேகத்தில் சுமார் இரண்டரை மணிநேரம் வெற்றிகரமாக பறந்த இந்த விமானம் புறப்பட்ட இடத்தில் பத்திரமாக தரையிறங்கி புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது.


Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here