பத்தாம் வகுப்பு, பிளஸ் 1,  பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மறுமதிப்பீடு, மறுகூட்டல் ஆகியவற்றுக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு வரும் திங்கள்கிழமை அதற்கானமுடிவுகள் வெளியாகின்றன.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதி மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்கள் பட்டியல் வரும் திங்கள்கிழமை வெளியிடப்படும். தேர்வர்கள் ள்ஸ்ரீஹய்.ற்ய்க்ஞ்ங்.ண்ய் என்ற இணையதளத்துக்குச் சென்று மறுகூட்டல் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். 
மதிப்பெண்களில் மாற்றம் உள்ள தேர்வர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மதிப்பெண் மாற்றங்களுடன் திங்கள்கிழமை பிற்பகல் முதல் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து இந்தப் பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் மதிப்பெண்களில் எந்தவித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்படுகிறது. 
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு...: இதேபோன்று கடந்த மார்ச் மாதம் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதி அதில் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் ள்ஸ்ரீஹய்.ற்ய்க்ஞ்ங்.ண்ய் என்ற இணையதளத்தில் வரும் திங்கள்கிழமை பிற்பகல் வெளியிடப்படவுள்ளது.  மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் அன்றைய தினம் பிற்பகல் 2 மணி முதல் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்



Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here