சென்னை:பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள்,தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, இன்று முதல் பள்ளிகளில் பெற்று கொள்ளலாம்.தனி தேர்வர்கள் வரும், 6ம் தேதி முதல், www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை,பதிவிறக்கம் செய்யலாம்.தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் மார்ச்சில் நடந்த தேர்வுக்கு விண்ணப்பித்து, தேர்வை எழுத முடியாதவர்களுக்கு, ஜூன், 14 முதல், 22 வரை சிறப்பு தேர்வுநடத்தப்படும்.இதற்கான விண்ணப்ப தேதி, பின் அறிவிக்கப்படும். தேர்வில் மதிப்பெண் குறைவாக இருப்பதாக சந்தேகம் இருப்பவர்கள், விடைத்தாளின் மதிப்பெண்ணை, மறுகூட்டல் செய்து கொள்ளலாம்.இன்று முதல், 4ம் தேதி மாலை, 5:45 மணிக்குள், பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.மொழிப் பாடங்களுக்கு, தலா, 305 ரூபாய், விருப்ப மொழி பாடம் மற்றும் முக்கிய பாடங்களுக்கு, தலா, 205 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..