100மில்லியன் ( 10 கோடி) சப்ஸ்கிரைபர்களை பெற்ற உலகின் முதல் யூ-டியூப் சேனல் என்ற மைல்கல்லை இந்தியாவின் டி-சீரிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
திரையிசை பாடல்கள், பட தயாரிப்பு நிறுவனம் என பண்முகம் கொண்ட டி-சீரிஸ் நிறுவனத்தின் யூ-டியூப் சேனல் 2011ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டது. 29 துணை சேனல்களை கொண்ட டி-சீரிஸ்-ன் வீடியோக்கள் அதிகமான பார்வைகளை பெற்று வருகின்றன.


இங்கிலாந்தில் வாழ்ந்து வரும் ஸ்வீடனை சேர்ந்த Felix Arvid Ulf Kjellberg என்பவர் நடத்தும் PewDiePie யூ-டியூப் சேனலே உலகளாவிய அளவில் அதிகமான சப்ஸ்கிரைபர்களை பெற்ற யூ-டியூப் சேனலாக இருந்து வந்தது. தற்போது இதனைவிட அதிகமான சப்ஸ்கிரைபர்களை பெற்று உலகின் நம்பர்-1 யூ-டியூப் சேனல் என்ற சாதனையை டி-சீரிஸ் படைத்துள்ளது.


கடந்த ஆண்டு அக்டோபர் முதலே PewDiePieக்கும், டி-சீரிஸுக்கும் இடையில் நீயா நானா என்ற போட்டி ஏற்பட்டது. இரு சேனல்களும் மாறி மாறி சப்ஸ்கிரைபர்களை ஈர்த்து வந்த நிலையில் இறுதியாக மகுடம் சூடியுள்ளது டி-சீரிஸ்.

இரு நிறுவனங்களுக்கான போட்டி டெல்லி உயர்நீதிமன்றம் வரையில் சென்று பின்னர் முறையற்ற வகையில் செயல்பட்டதால் PewDiePie-ன் வீடியோக்கள் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


19 வயதிலியே டி-சீரிஸின் நிர்வாக இயக்குனர் பதவிக்கு வந்த பூஷன் குமார், டி-சீரிஸ் என்ற பிராண்டினை வெற்றிகரமான முறையில் மேலும் பிரபலப்படுத்தியுள்ளார்.Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here