புதுக்கோட்டை,மே,28-       புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மெட்ரிக்பள்ளி முதல்வர்களுக்கான கூட்டம் நடைபெற்றது.

 இக்கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா கலந்துகொண்டு தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது: அங்கீகாரம் 31-05-2019 வரை உள்ள பள்ளிகள் ஜூன் மாதம் முதல்வாரத்திற்குள் உரிய முறையில் இணைய தளவாயிலாக விண்ணப்பிக்கவேண்டும்.மாணவர்களுக்கு சிறப்பான பாதுகாப்பு,போதுமான கழிப்பறை வசதி ஏற்படுத்தபடவேண்டும். அரசு நிர்ணத்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்யக்கூடாது. அரசு அவ்வப்போது அறிவிக்கும் உத்தரவுகளை தவறாது பின்பற்றவேண்டும். ஜூன் 3-ந்தேதி பள்ளித்திறப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் சிறப்பான முறையில் மேற்கொள்ளவேண்டும்.தகுதியுள்ள ஆசிரியர்களை மட்டுமே நியமனம் செய்து கற்றல்,கற்பித்தல் பணிகளை மேற்கொள்ளவேண்டும்.ஆசிரியர்களுக்கு ஈ.சி.எஸ் முறையில் சம்பளம் வழங்கவேண்டும். ஆர்.டி.இ 25 சதவீத இட ஒதுக்கீட்டின்படி எவ்வித புகாருக்கும் இடமளிக்காவண்ணம் மாணவர்கள் சேர்க்கையினை மேற்கொள்ளவேண்டும்..இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் கே.குணசேகரன்,புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் எஸ்.ராகவன்,அறந்தாங்கி மாவட்டக்கல்வி அலுவலர் எஸ்.அமுதாராணி,முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள், பள்ளித்துணை ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here