கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்தின் மூன்றாவது பீட்டா பதிப்பை வெளியிட்டு வருகிறது. இதனை அந்நிறுவனம் சமீபத்தில் நடந்து முடிந்த கூகுள் I/O 2019 நிகழ்வில் அறிவித்தது. ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்துக்கான முதல் பீட்டா பதிப்பு இந்த ஆண்டு மார்ச் மாதத்திலும் இரண்டாவது பீட்டா ஏப்ரல் மாதத்திலும் வெளியிடப்பட்டது.

புதிய பீட்டா வெர்ஷன் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி கூகுள் அல்லாத 15 ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த பட்டியலில் ஒப்போ, சியோமி, ரியல்மி, ஒன்பிளஸ், நோக்கியா மற்றும் பல்வேறு இதர பிராண்டுகள் இருக்கின்றன. இந்த பட்டியலை பயனர்கள் https://developer.android.com/preview/devices வலைதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இதனால் கூகுள் அல்லாத சாதனங்களை வைத்திருப்போர் ஆண்ட்ராய்டு கியூ பீட்டா 3 இயங்குதளத்தை இன்ஸ்டால் செய்ய விரும்பினால் அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். எனினும், ஆண்ட்ராய்டு கியூ பீட்டா டவுன்லோடு செய்யும் முன் இது சீரான இயங்குதளம் கிடையாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதுபோன்ற பீட்டா இயங்குதளங்களில் பிரச்சனைகள் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.


இதனால் பீட்டா இயங்குதளத்தை மெயின் போனில் இன்ஸ்டால் செய்வது சரியான முடிவாக இருக்காது. ஒருவேளை எதுவானாலும் இன்ஸ்டால் செய்ய முடிவு செய்வோர், தங்களது ஸ்மார்ட்போனை முழுமையாக பேக்கப் செய்வது நல்லது. பீட்டா இயங்குதளத்தால் டேட்டாவுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்.


1 - முதலில் பீட்டா திட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதனால் உங்களது கூகுள் அக்கவுண்ட்டில் சைன்-இன் செய்ய வேண்டும். இதற்கு https://www.google.com/android/beta வலைதளம் செல்ல வேண்டும். இங்கு எந்தெந்த சாதனங்களில் இந்த இயங்குதளம் இயங்கும் என்பதை பார்க்க முடியும்.


2 - வலைதளம் சென்றதும், ஸ்மார்ட்போனை திட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.


3 - என்ரோல் (Enroll) ஆப்ஷனை க்ளிக் செய்ததும், பதிவு செய்த ஸ்மார்ட்போனிற்கு சிஸ்டம் அப்டேட் தயார் என்பதை குறிக்கும் நோட்டிஃபிகேஷன் திரையில் தோன்றும்.


4 - இத்துடன் அதனை இன்ஸ்டால் செய்யக் கோரும் ஆப்ஷனும் தோன்றும். இந்த வழிமுறையின் போது ஸ்மார்ட்போன் தானாக ரீஸ்டார்ட் ஆகும். பின் ஸ்மார்ட்போனில் புதிய ஆண்ட்ராய்டு கியூ பீட்டா 3 இயங்குதளம் இன்ஸ்டால் ஆகியிருக்கும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி ஆண்ட்ராய்டு கியூ பீட்டா தளத்தை ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இயங்குதளத்திற்கு ஓவர்-தி-ஏர் அப்டேட்களை வழங்குவதாக கூகுள் தெரிவித்துள்ளது. இதில் செக்யூரிட்டி மற்றும் பிரைவசி பேட்ச்கள் இடம்பெற்றிருக்கும்.


ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்தில் புதுமை, பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் டிஜிட்டல் வெல்பீயிங் உள்ளிட்ட பகுதிகளில் அதிக கவனம் செலுத்துவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது