பகுதி நேர பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்க்கை பெற வரும் 6 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மூன்று ஆண்டு பட்டயப் படிப்பு முடித்து, குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாகப் பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள் மட்டுமே இந்த பகுதி நேர பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
இதுகுறித்த தமிழக அரசின் அறிவிப்பு:
கோவை, சேலம், திருநெல்வேலி, காரைக்குடி, வேலூர், பர்கூர் அரசு பொறியியல் கல்லூரிகள், கோவை தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (சிஐடி), கோவை பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகிய 9 கல்லூரிகளில் பகுதி நேர பி.இ., பி.டெக். படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இந்தக் கல்லூரிகளில் 2019-20-ஆம் கல்வியாண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் பட்டயப் படிப்பு முடித்து இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெற்றிருக்க வேண்டும். அதோடு, பணிபுரிபவராகவும், குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தவராகவும் இருக்க வேண்டும்.
இதற்கு மே 6-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஜூன் 4 கடைசி நாளாகும். விண்ணப்பதாரர்கள் விவரங்களை ஆன்-லைனில் பதிவு செய்து, அதைப் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பக் கட்டணத்துக்கான வரைவோலையுடன் செயலர், பகுதி நேர பி.இ., பி.டெக். சேர்க்கை, கோவை தொழில்நுட்ப கல்லூரி, கோவை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.ptbe-tnea.com என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here