*நிகழாண்டுக்கான ஜேஇஇ பிரதான (மெயின்) தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை இரவு வெளியிடப்பட்டன*

*மாணவர்கள் இதனை ஜேஇஇ.யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (jeemain.nic.in) இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்*

*ஐஐடி, என்.ஐ.டி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல், கட்டடக்கலை போன்ற துறைகளில் பட்டப்படிப்பை மேற்கொள்ள ஜே.இ.இ. எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (Joint Entrance Examination) நடத்தப்படுகிறது. இதனை என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வுகள் முகமை நடத்துகிறது*

*இந்த ஆண்டு முதல் இந்த தேர்வு இரண்டு முறை நடத்தப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் ஜே.இ.இ மெயின் முதல் தேர்வு நடைபெற்றது*

*ஏப்ரலில் ஜே.இ.இ*
*மெயின் இரண்டாவது தேர்வு நடைபெற்றது*

*இந்த இரு தேர்வுகளையும் எழுதியவர்கள் எந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அதனை அடிப்படையாக வைத்து தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும்*

*இந்த ஆண்டு ஜேஇஇ மெயின் இரண்டாவது தேர்வு ஏப்ரல் 7 முதல் 12 வரையிலான நாள்களில் நடைபெற்றது*

*மாணவர்கள் தேர்வு முடிவுகளை ஜேஇஇ.யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (jeemain.nic.in) தெரிந்து கொள்ளலாம்*

*தேர்வு முடிவுகளின்படி மொத்தம் 24 மாணவர்கள் சதம் எடுத்துள்ளனர்*

*இந்த இரு தேர்வுகளையும் மொத்தம் 11 லட்சத்து 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். இதில் 2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்*

*தமிழக அளவில் கோவையைச் சேர்ந்த விக்ரம் முதல் இடத்தைப் பெற்றுள்ளார். அவர் தேசிய அளவில் 28-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்*

*சென்னையைச் சேர்ந்த கெளரவ பிரகாஷ் தமிழக அளவில் 2-ஆவது இடத்தையும் தேசிய அளவில் 133 இடத்தையும் பிடித்துள்ளார்*