*தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 21,769 மாணவர்கள் எழுதாமல் போனதற்கான காரணத்தை பள்ளிக்கல்வித்துறை கண்டறிய வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது*

*இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்ட அறிக்கை*

*தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை நடத்தும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் பள்ளிகளில் 2018-2019 கல்வியாண்டில் படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை 9 லட்சத்து 59 ஆயிரத்து 618 ஆகும். ஆனால், தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 37 ஆயிரத்து 849 தான். அப்படி பார்த்தால் 21, 769 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது*

*இடைநிற்றல், இடம் மாறிச்சென்றவர்கள் என சராசரியாக சுமார் 5,000 மாணவர்கள் என எடுத்துக் கொண்டாலும் மீதமுள்ள 16,769 மாணவர்களின் நிலை கேள்விக் குறியாகவே உள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிடாமல் தடுப்பது யார்? மாணவர்களின் எதிர்காலத்திற்கு என்ன உத்தரவாதம்*

*100 சதவீதம் தேர்ச்சிக்காக தனியார் மெட்ரிக் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடப்படுகிறதா அல்லது அதிகாரிகள் 100 சதவீதம் தேர்ச்சியை வலியுறுத்துவதால் மாணவர்கள் வலுக்கட்டாயமாக இடையில் நிறுத்தப்படுகிறார்களா? இது அரசுப்பள்ளிகளிலும் தொடருகிறதா என்பது குறித்தும் பள்ளிக்கல்வித்துறை விரிவான ஆய்வு நடத்திட வேண்டும்*

*ஆண்டுதோறும் தேர்வு எழுதாத மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது*

*இதில் பள்ளிக்கல்வித்துறை முழுமையாக ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்