2018ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த செமஸ்டர் தேர்வு முடிவுகள்  அடிப்படையில் தரவரிசை பட்டியலை அண்ணா  பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள  இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழக தேர்வு  கட்டுப்பாட்டு துறை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அந்த  அடிப்படையில் இந்த ஆண்டுக்கான கல்லூரிகள் தரவரிசை பட்டியலை அண்ணா  பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டுத்துறை நேற்று வெளியிட்டது.  aucoe.annauniv.edu என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்கள், பெற்றோர் மேற்கண்ட இணையதளத்தில் அக்டமிக் பெர்பார்மன்ஸ் ஆப் அபிலியேட்டட்  காலேஜஸ் என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும். அதில் கடந்த 5 ஆண்டுகளுக்கான  தேர்வு தரவரிசை பட்டியல்கள் இடம்பெற்றுள்ளது. அவற்றை பதிவிறக்கம் செய்து  கல்லூரிகளின் தேர்ச்சி விகிதத்தை ஒப்பிட்டு பார்த்து இன்ஜினியரிங்  கலந்தாய்வை எதிர்ேநாக்கியுள்ள மாணவர்கள் கல்லூரியை தேர்வு செய்யலாம். 

2018ம்  ஆண்டு நவம்பரில் நடந்த செமஸ்டர் தேர்வுகளில் அண்ணா பல்கலைக்கழகத்துடன்  இணைவு பெற்ற 481 கல்லூரிகளில் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். அதில்  அதிகபட்சமாக சேலத்தை சேர்ந்த இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹேன்ட்லூம்  டெக்னாலஜி கல்லூரியில் 88.12 சதவீத  மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே  நேரத்தில் 6 கல்லூரிகளில் தேர்வு எழுதிய மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி  பெறவில்லை. தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரிகளில் தேர்ச்சி பெற்ற  மாணவர்கள் விகிதத்தை விட, அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தேர்ச்சி  ெபற்றவர்களின் விகிதம் குறைவாக உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் கல்லூரிகளான, கிண்டி இன்ஜினியரிங் கல்லூரி,  அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜி, குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி இன்ஜினியரிங்  கல்லூரிகளின் தேர்ச்சி விகிதத்தை விட, தன்னாட்சி அதிகாரம் பெற்ற  கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது.


இணைவு பெற்ற  கல்லூரிகளை பொறுத்தவரை தரவரிசைப்பட்டியலில் இடம்பெற்றுள்ள 481 கல்லூரிகளில்  சில கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். சில  கல்லூரிகளில் மொத்தமே இரட்டை இலக்க எண்ணிக்கை (100 பேருக்கும் குறைவாக)  மாணவர்கள் பயின்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வேலைவாய்ப்பை  எதிர்நோக்கியே மாணவர்கள் இன்ஜினியரிங் படிக்க வருகிறார்கள்.  அப்படியிருக்கையில் பணி நியமனம் (கேம்பஸ் பிளேஸ்மன்ட்) அடிப்படையில்  தரவரிசை பட்டியல் வெளியிட்டால் மட்டுமே அது இன்ஜினியரிங் சேர உள்ள  மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று பேராசிரியர்கள் கருத்து  தெரிவித்துள்ளனர்.Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here