அரசு நடத்தும் அனைத்து தேர்வுகளையும் எழுத மாணவர்கள் தயாராக இருக்க வேண்டுமென பட்டமளிப்பு விழாவில் முதன்மை மாவட்ட நீதிபதி டி.சுமதி அறிவுறுத்தினார்.

அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவர் மேலும் பேசியது:

மாணவர்கள் பட்டங்களை வாங்கி விட்டோம், வேலை கிடைத்துவிடும் என நினைக்காமல், அரசால் நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளையும் எழுத தயாராக வேண்டும்.

தொடர்ந்து, அனைத்து தேர்வுகளிலும் கலந்து கொண்டு தேர்வெழுதும் போது, ஏதேனும் ஒன்றில் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

படிப்புக்கேற்ற வேலையைத்தான் செய்வேன் என நினைக்காமல், போட்டியுள்ள இந்த கால கட்டத்தில் கிடைக்கும் வேலையை ஏற்றுச் செய்ய மாணவர்கள் தயாராக வேண்டும்.

அதேபோல், இதுவரை மாணவர்களாக இருந்த நீங்கள் தங்களது பெற்றோர்களிடம் அனைத்து தேவைகளுக்கும் பணம் பெற்றிருப்பீர். இனி அவர்களது கடன்களை அடைக்க நீங்கள் முயற்சி செய்ய வேண்டும் என்றார் அவர்.

தொடர்ந்து அனைத்து துறைகளைச் சேர்ந்த 672 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை நீதிபதி சுமதி வழங்கினார்.Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here