அம்பத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு தொழிற்பிரிவுகளில் கலந்தாய்வு சேர்க்கைக்கு இணையதளம் மூலம் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டத்துக்குள்பட்ட அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் நிகழாண்டில் பல்வேறு தொழில் பிரிவுகளுக்கான மாவட்டக் கலந்தாய்வு முறை சேர்க்கை நடைபெற இருக்கிறது.

அதனால், இக்கலந்தாய்வுக்கு மாணவ, மாணவிகள் www.skilltr​aining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

 இதில், சேர விரும்புவோர் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் ஆகும்.

இதில் மேலே குறிப்பிட்ட இணையதளம் மூலம் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் முறை பற்றி எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் தகுதியுள்ள மாணவ, மாணவிகள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், இந்த இணையதள முகவரியில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் முறை, அதற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு ஆகிய அனைத்து விவரங்களும் இணையதள விளக்கக் கையேட்டில் தரப்பட்டுள்ளது.

அதை கவனமாகப் பார்த்து அரசு இ-சேவை மையங்களில் இருந்து நேரடியாக விண்ணப்பங்களை வரும் 31-ஆம் தேதிக்குள் சமர்ப்பித்து பயனடையலாம்.


இது தொடர்பான விவரங்களுக்கு, அம்பத்தூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநர் மற்றும் முதல்வரை நேரடியாகவோ அல்லது 044-26252453 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு, தேவையான விவரங்களை அறிந்து கொள்ளலாம்.



Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here