ஓட்டுர் உரிமம் மற்றும் இதர வாகனம் சார்ந்த ஆவணங்களை கையில் எடுத்து செல்ல நம்மில் பலரும் மறந்து விடுவோம். இவ்வாறு செல்லும் போது தான் போக்குவரத்து காவல் துறை நம்மை நிறுத்தி சோதனை செய்வர். இந்த பிரச்சனையை சரி செய்யவே மத்திய அரசாங்கம் எம் பரிவாஹன் எனும் அதிகாரப்பூர்வ செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியில் பயனர்கள் தங்களது வாகன பதிவு சான்றிதழ் (ஆர்.சி.), ஓட்டுனர் உரிமம் போன்றவற்றை ஸ்மார்ட்போனில் டிஜிட்டல் முறையில் வைத்துக் கொள்ளலாம்.
இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் கிடைக்கிறது. இவற்றை பயனர்கள் பிளே ஸ்டோர்களில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
டாக்யூமென்ட்களை விர்ச்சுவல் முறையில் வைத்திருப்பதும், ஆவணங்களை அசலாக கையில் வைத்திருப்பதற்கு சமம். இதனால் ஆவணங்களை ஸ்மார்ட்போனில் இருந்து காண்பித்தாலே போதுமானது.
முதலில் தேவையானவை:
விர்ச்சுல் டிரைவிங் லைசன்ஸ் மற்றும் ஆர்.சி. புத்தகத்தை டவுன்லோடு செய்ய பயனர் தங்களது வாகன பதிவு எண் மற்றும் ஓட்டுனர் உரிமம் எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை வைத்திருக்க வேண்டும். இதனால் வழிமுறைகளை பின்பற்றும் முன் இவற்றை கையில் வைத்திருக்க வேண்டும்.
செயலியை டவுன்லோடு செய்வது எப்படி?
- கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் சென்று mparivahaan செயலியை தேட வேண்டும்.
- இனி வலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் மூன்று கோடுகளை க்ளிக் செய்ய வேண்டும்.
- சைன்-இன் ஆப்ஷனை க்ளிக் செய்து உங்களின் மொபைல் நம்பரை பதிவிட வேண்டும். பின் ஸ்மார்ட்போனிற்கு வரும் குறியீட்டு எண்ணை பதிவிட வேண்டும்.
- இவ்வாறு செய்ததும் ஆர்.சி. ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
- இனி வாகனத்தின் பதிவு எண் பதிவு செய்து சர்ச் செய்ய வேண்டும்.
- இனி செயலியை வாகன பதிவு எண்ணுடன் கொண்ட விவரங்களை தேடும்.
- அடுத்து Add to dasboard ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
விர்ச்சுவல் டிரைவிங் லைசன்ஸ் டவுன்லோடு செய்வது எப்படி?
- செயலி ஹோம்ஸ்கிரீனில் இருக்கும் ஆர்.சி. டேபை க்ளிக் செய்ய வேண்டும்.
- இனி டிரைவிங் லைசன்ஸ் நம்பரை பதிவிட்டு சர்ச் செய்ய வேண்டும்.
- செயலி டிரைவிங் லைசன்ஸ் உடன் இணைக்கப்பட்டு இருக்கும் விவரங்களை தரவிறக்கம் செய்யும்.
- இறுதியில் Add to dashboard ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..