https://assets-news-bcdn-ll.dailyhunt.in/cmd/resize/400x400_60/fetchdata13/images/e3/fe/a9/

வாட்ஸ் ஆப் நிறுவனம் தற்போது ஒரு சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
தன்னை காத்துக் கொள்ளவும் சந்தையில் நிலை நிறுத்திக் கொள்ளவும்.
வணிக சாமர்த்தியமான முடிவுகளையும் எடுத்து வருகின்றது. இதில் வாட்ஸ் ஆப் நிறுவனம் வருமானம் ஈட்ட
இதுபோன்ற நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பொது மக்களையும் இந்த செயல் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வருமானம் குறைவு:
கடந்த சில மாதங்களுக்கு முன் வாட்ஸ் ஆப் செயலியால் தங்களுக்கு எந்த வருமானம் இல்லை என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
வாட்ஸ் ஆப் செயலியால் வருமானம் இல்லை என்றும் கவலையை தெரிவித்து இருந்தது. இந்நிலையில் ஒரு முக்கிய முடிவையும் எடுத்துள்ளது.

வருமானம் ஈட்ட முடிவு:
இந்நிலையில், இலவசமாக பயன்படுத்தப்படும் குறுஞ்செய்தி அனுப்பும் செயலியான வாட்ஸ்ஆப்புக்கு நாளுக்கு நாள் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதன் மூலம் வருமானம் ஈட்ட பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.


வாட்ஸ் ஆப்பில் விளம்பரம்:
அதன்படி, வரும் 2020ஆம் ஆண்டு முதல் வாட்ஸ்ஆப்பில் விளம்பரங்கள் வரவிருப்பதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. இதனால் வாட்ஸ் ஆப்புக்கு வருவாயை அதிகரிக்கவும் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


லிங்குடன் விளம்பரம்:
நெதர்லாந்தில் நடந்த பேஸ்புக் வர்த்தக மாநாட்டில் இதுகுறித்து வெளியிடப்பட்ட தகவலில், முதல்கட்டமாக இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் வருவது போல வாட்ஸ்ஆப் ஸ்டோரிகளுக்கு இடையே லிங்குடன் விளம்பரம் செய்யும் வசதி வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here