இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி பணிக்கு ( LKG& UKG ) அனுப்புகின்ற அரசின் ஆணையை நீக்குவதற்காக பேரியக்கமானது அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையின் மூலமும் சட்டரீதியான நடவடிக்கைகள் மூலமும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் சார்பாக புதுடில்லியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள நான், தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை இன்று 27.05.19 காலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தற்போது அங்கன்வாடிக்கு (LKG& UKG) பணியமர்த்தப்படும் ஆசிரியர்களில் மூத்தோர், பதவி உயர்வில் காத்திருப்போர் ஆகியோரை பணியமர்த்தக் கூடாது என்றும் பணிநிரவல் அல்லாத பள்ளிகளில் இருந்து ஆசிரியர்களை அங்கன்வாடிக்கு (LKG& UKG) அனுப்பக் கூடாது என்றும், பணி  நிரவலின் போது ஒன்றிய அளவில் எப்போதும் கடைபிடிக்க கூடிய முன்னுரிமைப் பட்டியலின்படி தான் நடைமுறைப்படுத்த வேண்டும். என்றும் வலியுறுத்தினேன். தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களும் அதனை பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார்.

இவண்.
ந.ரெங்கராஜன்
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி