நடந்து முடிந்த இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் உயிரியல் பாட கேள்விகள் எளிமையாகவும் இயற்பியல் மற்றும் வேதியியல் பாட கேள்விகள் கடினமாகவும் அமைந்துள்ளன. எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடந்தது. புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களில் நடந்த இத்தேர்வில் 15.19 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் மட்டும் 188 தேர்வு மையங்களில் 1.4 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். இத்தேர்வுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள் எப்படி இருந்தது? என்பது பற்றிப் பார்க்கலாம்.

வினாத்தாள் எப்படி இருந்தது?
1.உயிரியல் வினாக்கள் சுலபமாக இருந்தன. இயற்பியல் மற்றும் வேதியியல் வினாக்கள்தான் எதிர்பார்த்ததைவிட கடினம் என பல மாணவர்கள் கருதுகின்றனர்.

2. பெரும்பாலான கேள்விகள் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்திலிருந்து வந்தவையாக இருந்தன என சில மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

3. எதிர்பார்த்ததைப் போலவே எண் கணித கணக்குகள் சில கடினமாக இருந்தன என்று கூறுகிறார்கள். 4. புனேயில் தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் சரியாக 2 மணிக்கு வழங்கப்பட்டன. பதிவு எண் உள்ளிட்ட தேவையான விவரங்களை நிரப்ப 10 நிமிடங்கள் ஆனது. விடைத்தாளை தேர்வு நேரத்துக்கு முன்பே கொடுத்திருக்கலாம் என்று கருகின்றனர்.

கட் ஆப் எவ்வளவு?

 "2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் இருந்ததை போலவே இந்த ஆண்டும் கட் ஆப் மதிப்பெண் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய ஆச்சரியம் அளிக்கும் மாற்றம் இருக்காது." என கல்வியாளர் துர்கேஷ் மங்கேஷ்கர் கணிக்கிறார்.