TNPSC குரூப்-2 மற்றும் 2-ஏ தேர்வுஉள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி விரைவில் வெளியிடும்?


டிஇஓ தேர்வு உட்பட ஒரேநாளில் 9 போட்டித்தேர்வுகளின் முடிவு களை வெளியிட்டு டிஎன்பிஎஸ்சி சாதனை படைத்துள்ளது.



டிஎன்பிஎஸ்சி நடத்திய வனச் சரக அலுவலர் தேர்வு, தொழில் துறை முதுநிலை வேதியியலாளர் தேர்வு, ஊரமைப்பு கட்டிடக்கலைஉவியாளர், திட்ட உதவியாளர் தேர்வு, அரசு ஐடிஐ முதல்வர் மற்றும் உதவி பொறியாளர் தேர்வு, மாவட்ட கல்வி அலுவலர் (டிஇஓ) தேர்வு,வணிகத்துறை உப்பு ஆய் வாளர் தேர்வு, தடயஅறிவியல் துறை பண்டக காப்பாளர் தேர்வு, பல்வேறு துறைகளில் நூலகர் தேர்வு, உதவி வேளாண் அலு வலர் தேர்வு ஆகிய 9 போட்டித் தேர்வுகளின் முடிவுகள் வியாழக் கிழமை ஒரேநாளில் வெளியிடப் பட்டன.

தேர்வு முடிவுகளின்படி, அடுத்த கட்ட நிலைகளுக்கு தேர்வுசெய்யப்பட்ட விண்ணப்ப தாரர்களின் பதிவெண்கள் அடங் கிய பட்டியலை இணையதளத் தில் (www.tnpsc.gov.in) தெரிந்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் வரையில் நடத்தப் பட்ட போட்டித்தேர்வுகளின் முடிவு களையும் டிஎன்பிஎஸ்சி வெளி யிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையின்படி, ஏப்ரல், மே மாதங்களில் வெளி யிடப்பட்டிருக்க வேண்டிய தலைமைச்செயலக உதவியாளர் (மொழிபெயர்ப்பு) தேர்வு, அரசு அருங்காட்சியக காப்பாளர் தேர்வு, உதவி சுற்றுலா அலுவலர் தேர்வு, குரூப்-2 மற்றும் 2-ஏ தேர்வு, தடயஅறிவியல்துறை இள நிலை அறிவியல் அலுவலர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி விரைவில் அடுத்தடுத்து வெளியிடும் என எதிர் பார்க்கப்படுகிறது.


Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here