முதுநிலை பொறியியல் படிப்புகள், எம்.பி.ஏ. எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கான "டான்செட்' (பஅசஇஉப ) நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க சனிக்கிழமை (மே 25) கடைசி நாளாக இருந்த நிலையில் வரும்  31-ஆம் தேதி வரை நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
பி.இ. முடித்தவர்கள் முதுநிலை படிப்புகளான எம்.இ., எம்.டெக்., உள்ளிட்ட படிப்புகளில் சேர "டான்செட்' நுழைவுத் தேர்வை எழுத வேண்டியது அவசியம். 
இந்த நுழைவுத் தேர்வை இந்தாண்டும் அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அதன்படி, பொறியியல் முதுகலை படிப்புகளில் சேர 'டான்செட்' நுழைவுத் தேர்வுக்கு மே மாதம் 8-ஆம் தேதி முதல்  25-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 
இதையடுத்து தற்போது மே 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

டான்செட் தேர்வுக்கு https://www.annauniv.edu/tancet2019 என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 
எம்.சி.ஏ. படிப்புக்கு வரும் ஜூன் 22-ஆம் தேதி காலை 10 முதல்  நண்பகல் 12 மணி வரையிலும், எம்.பி.ஏ. படிப்புக்கு ஜூன் 22-ஆம் தேதி பிற்பகல் 2.30 முதல் 4.30 மணி வரையிலும்,  எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் உள்ளிட்ட படிப்புகளுக்கு ஜூன் 23-ஆம் தேதி காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரையிலும் தேர்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.



Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here