சென்னை: தமிழக அரசின் நலத்திட்டங்களில் நிதியுதவி பெறுவதற்கான உச்ச வருமான வரம்பு ரூ.24 ஆயிரத்தில் இருந்து ரூ.72 ஆயிரமாக அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
தமிழக்ததில் ஏழைகளுக்கான திருமண நிதியுதவி திட்டங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த குடும்ப ஆண்டு வருமானத்தின் உச்ச வரம்பை ரூ.24 ஆயிரத்தில் இருந்து ரூ.72 ஆயிரமாக உயர்த்தி மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு உத்தரவிட்டிருந்தது. இதனால் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் கூடுதலாக பயனாளிகள் பயனடைந்து வந்தார்கள். 
இந்நிலையில், அரசின் நலத்திட்டங்களில் நிதியுதவி பெறுவதற்கான உச்ச வருமான வரம்பை அதிகரித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 
அதில், திருமண நிதியுதவி திட்டங்களை போலவே சமூக நலத்துறையின் கீழ் ஏழை விதவைகளின் குழந்தைகளுக்கான இலவச பாடநூல், குறிப்பேடுகள் வழங்கும் திட்டத்திற்கான ஆண்டு வருமான உச்ச வரம்பை ரூ.24 ஆயிரத்தில் இருந்து ரூ.72 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 
இதேபோன்று தொழில் கூட்டுறவு சங்கங்களில் அங்கத்தினர் அனுமதி, தையல் பயிற்சிகளில் சேர்க்கை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் சேவை இல்லங்களுக்கும் வருமான உச்ச வரம்பும், மூன்றாம் பாலினத்தவர் நலத்திட்ட உதவி வழங்கும் திட்டங்களுக்கான வருமான உச்ச வரம்பு ரூ.72 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 
இதன் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதலாக பயனாளிகள் பயன் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here