தொடக்க கல்வி பட்டயத் தேர்வு எனும் டிடிஎட் தேர்வு எழுத
விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் வெள்ளிக்கிழமை முதல் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் தொடக்க கல்வி பட்டய வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான இரண்டாம் ஆண்டு தேர்வு வரும் 14-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரையும், முதலாம் ஆண்டு தேர்வுகள் 15-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளன.
இந்த தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தின் (தத்கல்) கீழ் விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் தங்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here