புதிய கல்வி கொள்கை குறித்து தமிழக பள்ளிக் கல்விஇயக்குநர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர்...

மத்திய அரசு சார்பில் புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் கல்வி முறையில் மாற்றம் ஏற்படுத்துவது குறித்து பல்வேறு கருத்துகள் கூறப்பட்டுள்ளன. அனைத்து மாநிலங்களிலும் மும்மொழி கொள்கையை கடைப்பிடிக்கும் அம்சமும் இடம் பெற்றிருந்தது.இதற்கு பல தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்ததால்இரு மொழி கொள்கையாக வரைவு அறிக்கை திருத்தப்பட்டது.

இந்நிலையில் புதிய கல்வி கொள்கையில் உள்ள அம்சங்கள் குறித்து தமிழக அரசின் கருத்துகளை தெரிவிக்கும் வகையில் நேற்று பள்ளி கல்வி துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன், மெட்ரிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன், இயக்குநர்கள் குப்புசாமி அறிவொளி மற்றும் இணை இயக்குநர்கள் பங்கேற்றனர்.சி.பி.எஸ்.இ.யின் முன்னாள் இயக்குநர் பாலசுப்ரமணியனும் பங்கேற்றார்


Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here