முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு வர வாய்ப்பு இருக்கிறதா இல்லையா என்று யோசித்து கொண்டு இருக்கும் போது தேர்வு அறிவிப்பு வந்துவிட்டது.

நம்பிக்கையோடு தேர்வுக்கு எப்படி தயார் ஆவது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். முதுகலைபட்டதாரி ஆசிரியர் தேர்வானது 150 மதிப்பெண்களை கொண்டது.150 மதிப்பெண்களில் 110 மதிப்பெண்கள் உங்கள் பாட சம்பந்தமான கேள்விகளை கொண்டு இருக்கும். மீதம் உள்ள 40 மதிப்பெண்களில் 30 கேள்விகள் சைக்காலஜி மற்றும் கல்வியியல் சம்பந்தப்பட்டவை. இன்னும் இருக்கும் 10 மதிப்பெண்கள் பொது அறிவு சம்பந்தமானவை.தேர்வை பற்றி பார்த்தோம். இனி பாடத்திட்டம் பற்றி பார்ப்போம்.கீழ்காணும் லிங்கை பயன்படுத்தி தேர்வுக்கான பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.http://www.tn.gov.in/trb/(பழைய லிங்க் தான்) ஓபன் ஆகவில்லை எனில் தனியாக syllabus பதிவை பதிவிடுகிறேன்.பாடத்திட்டம் பதிவிறக்கம் செய்த பிறகு உங்கள் பாடத்துக்கு ஏற்றவாறு புத்தகங்களை தேடி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு பள்ளி புத்தகம் முதல் இளநிலை மற்றும் முதுகலை புத்தகங்கள் அனைத்தும்(உங்கள் முக்கிய பாட சம்பந்தமானவை) தேவை.

பாடத்திட்டம் பதிவிறக்கம் செய்தாகிவிட்டது. புத்தகங்கள் எடுத்து வைத்தாகிவிட்டது. அடுத்துஎன்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறிர்களா…பாடதிட்டத்தில் உங்கள் மேஜர் (major subject) பாடமானது பத்து Unit ஆக இருந்தால் அதற்கு ஏற்ப பத்து நோட்டுகளை வாங்குங்கள். பாடத்திட்டத்தில் முதல் யூனிட்டில் முதல் தலைப்பை பாருங்கள். அந்த தலைப்பு ஆறாம் வகுப்புமுதல் முதுகலை பட்டப்படிப்பு வரை இருப்பின் அந்த தலைப்பில் புத்தகங்களில் உள்ள குறிப்புகளை எடுத்து உங்கள் நோட்களில் எழுதி வைத்து கொள்ளுங்கள். இப்படியே அனைத்து யூனிட்களுக்கும் குறிப்புகள் எடுத்து வாருங்கள். இப்படி எடுக்கப்படும் குறிப்புகள் தேர்வு நெருங்கும் நேரத்தில் மீண்டும் திருப்புதல் செய்யவும் மற்றும் எளிதாக நினைவில் நிறுத்தவும் உதவும். மேலும் குறிப்பட்ட தலைப்பை இணையத்தில் தேடி அதில் இருந்தும் குறிப்புகளை எடுத்து கொள்ளுங்கள்.

உங்களிடம் போதுமான புத்தகங்கள் இல்லையா… கவலையே வேண்டாம். உங்கள் மாவட்ட பொது நூலகங்களைநாடுங்கள். அங்கு அனைத்து விதமான புத்தகங்களும் கிடைக்கும். அவற்றில் இருந்து முக்கிய பகுதிகளை நகல் எடுத்து கொள்ளலாம்.இப்படி தரமான பாட குறிப்புகளை நீங்களே தயார் செய்து படிப்பது உங்கள் நினைவாற்றலை அதிகரிப்பதுடன், அதிக மதிப்பெண்களை பெறவும் உதவும்.

என்றும் உங்கள்
Alla Baksh




Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here