🕴🕴🕴🕴🕴🕴🕴🕴🕴👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻







*இன்றைய திருக்குறள்*

குறள்- 463

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
 ஊக்கார் அறிவுடை யார்.

*மு.வ உரை:*

பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார்.

*கருணாநிதி  உரை*:

பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்.

*சாலமன் பாப்பையா உரை:*

வரும் லாபத்தை எண்ணி, இருக்கும் முதலையும் இழந்துவிடுவதற்கு ஏற்ற செயலை அறிவுள்ளவர் செய்யமாட்டார்.

✡✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*

மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம் தான். ஆனால் வாயை மட்டும் மூடிக்கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது.அதனால் எந்த பயனும் இல்லை.
-இரமண மகரிஷி

✳✳✳✳✳✳✳✳

*பழமொழி*

அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.

Little strokes fell great oaks.

✍✍✍✍✍✍✍✍

*பொது அறிவு*

1. சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் எங்கு உள்ளது?

*ஜெனிவா*

2. மனிதன் ஒரு சமூக பிராணி -யாருடைய கூற்று இது?

*அரிஸ்டாட்டில்*

🧬🧬🧬🧬🧬🧬🧬🧬

*Today's grammar*

*Common grammar mistakes*

Wrong : I like very much ice cream.
Right : I like ice cream very much.

Wrong : She can to drive.
Right : She can drive.

Wrong : Where I can find a bank?
Right : Where can I find a bank?

📫📫📫📫📫📫📫📫

*அறிவோம் தமிழ்*

*அணி*

அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணமாகும்.

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

*Important Used Words*

 Gum   ஈறு

 Fist முஷ்டி, பிடி

 Mouth வாய்

 Urinary Bladder சிறுநீர்ப்பை

 Mustache மீசை

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

 *புதிர் கதை*

*தங்க குடமும் தங்க காசும்*

 ஒரு அரசன் இறக்கும் போது தன் மூன்று பிள்ளைகளுக்கு முப்பது தங்கக் குடங்களில் தங்கக் காசுகளையும் விட்டுச் சென்றான். அதில் முதல் பத்து குடங்களில் தங்கக் காசுகள் முழுமையாகவும் அடுத்த பத்து குடங்களில் அரைவாசியாகவும் அடுத்த பத்து குடங்கள் வெறும் தங்க குடங்களாகவும் இருந்தன. ஒரு குடத்திலுருந்து இன்னொரு குடத்திற்கு தங்க காசுகளை மாற்ற முடியாதெனில் மூவருக்கும் எவ்வாறு தங்கக் காசுகளையும் தங்கக் குடங்களையும் சமமாகப் பகிரலாம்.

*விடை* :

மூவருக்கும் தலா பத்து தங்கக் குடங்களும் ஐந்து குட தங்கக் காசுகளும் கிடைக்க வேண்டும். எனவே முதலாமவனுக்கு பத்து அரைவாசி தங்கக் காசு குடங்களும் ஏனைய இருவருக்கும் ஐந்து முழு தங்கக் காசு குடங்களும் ஐந்து வெற்று தங்கக் குடங்களுமாக பகிரப்பட வேண்டும்.

🧾🧾🧾🧾🧾🧾🧾🧾

*செய்திச் சுருக்கம்*

🔮வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்த புதிய இயந்திரம்: அரசுப் பள்ளி மாணவர்கள் கண்டுபிடிப்பு.

🔮தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

🔮12-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து தமிழின் தொன்மை தொடர்பான சர்ச்சைக்குரிய பகுதிகள் நீக்கம்...பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை.

🔮காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: 2 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை; இந்திய ராணுவ வீரர் வீரமரணம்.

🔮புதிதாக அமைக்கப்பட உள்ள செங்கல்பட்டு, தென்காசி மாவட்டங்களுக்கான சிறப்பு அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு.

🔮நிலக்கோட்டையில் பாரம்பரிய விளையாட்டுகள் மீட்பு விழா.

🔮8-Foot-Long Crocodile Emerges Out Of Roadside Drain In Maharashtra.

🔮183 Students, Stranded In Madhya Pradesh Hostel For Floods, Rescued.

🔮Everything is normal in Kashmir, people should not pay heed  ..

♻♻♻♻♻♻♻♻

*தொகுப்பு*

T.தென்னரசு,
TN டிஜிட்டல் டீம்,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷


Join Whats App Group Link -Click Here


Join Telegram Group Link -Click Here