புதுக்கோட்டை,ஜீலை.21:மாநில அளவில் நடைபெறும் தேக்வாண்டோ போட்டிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 60 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 புதுக்கோட்டை மாவட்ட தேக்வாண்டோ விளையாட்டு சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான தேக்வாண்டோ போட்டிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள தேர்வுக் கூட அரங்கில் நடைபெற்றது.

தேக்வாண்டோ விளையாட்டு சங்க மாவட்ட செயலாளர் எம்.பாலசுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார்.மாவட்டத் தலைவர் எம்.மாரிமுத்து தலைமை தாங்கினார். தேக்வாண்டோ சங்க கௌரவத் தலைவர்  எஸ்.கார்த்திக் முன்னிலை வகித்தார்.

 அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) கு.திராவிடச்செல்வம்,இலுப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் ( பொறுப்பு) எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் போட்டியினை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்கள்.பின்னர் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் பரிசுக்கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கிப் பாராட்டினார்கள்.

 மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு,தேர்வு திட்ட அமைப்பாளர் ஜெயராஜ்,ஸ்ரீ பிரகதாம்பாள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.ராஜேந்திரன்,மாவட்ட உடற்கல்வி அலுவலர் ஆர்.தங்கராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.முடிவில் தேக்வாண்டோ விளையாட்டு சங்க மாவட ட துணை செயலாளர் எம்.சாகுல்ஹமீது நன்றி கூறினார்.
 
 போட்டியில் மாவட்ட முழுவதும் 54 பள்ளிகளில் இருந்து 245 மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள 60 தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

போட்டிக்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்ட தேக்வாண்டோ சங்க மாவட்டத் தலைவர் மாரிமுத்து  செய்திருந்தார்.


Join Whats App Group Link -Click Here


Join Telegram Group Link -Click Here