தமிழகத்தில் காஞ்சிபுராத்தை பிரித்து செங்கல்பட்டு மாவட்டம்,  நெல்லையை பிரித்து தென்காசி மாவட்டம் புதிதாக உதயமாகிறது.

தென்காசி, செங்கல்பட்டு புதிய மாவட்டங்கள் உதயம்.
தமிழக முதல்வர் அறிவிப்பு.

தென்காசி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று அதிமுக கூட்டணிக் கட்சியான புதிய தமிழகம் கட்சி கடந்த 1998 முதல் கோரிக்கை வைத்து வந்தனர்.
தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர், வாசுதேவநல்லூர் பகுதியை மேம்படுத்த தென்காசி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ.வாக இருந்த  புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சட்டமன்றத்தில் குரல் கொடுத்துள்ளார்.
சங்கரன்கோவில் அதிமுக  எம்.எல்.ஏ. கருப்பசாமி, மதிமுக எம்.எல்.ஏ. டாக்டர் சதன் திருமலைக்குமார், திமுக எம்.எல்.ஏ. டாக்டர் பூங்கோதை, சமக எம்.எல்.ஏ. ஆர்.சரத்குமார் உள்ளிட்டோரும் தென்காசி மாவட்டம் உருவாக்க வேண்டுமென சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.
தேர்தல் வாக்குறுதியாக அதிமுக, திமுக இரு கட்சிகளும் தென்காசி மாவட்டம் குறித்து உறுதி கொடுத்துள்ளனர்.


Join Whats App Group Link -Click Here


Join Telegram Group Link -Click Here