சமீபத்தில் வெளியாகியுள்ள 'ராட்சசி' திரைப்படம் அரசுப் பள்ளி ஆசிரியர்களிடமிருந்து வரவேற்பையும் எதிர்ப்பையும் சரிவிகிதத்தில் பெற்றுவருகிறது. இந்தப் படத்தின் விமர்சனம் வழியாக ஒரு கேள்வி எல்லோர் மத்தியிலும் மீண்டும் எழுப்பட்டிருக்கிறது. `அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப் பள்ளியில் ஏன் படிக்க வைக்கவில்லை?' என்பதுதான் அது.


இக்கேள்வி, ஆசிரியர்களின் போராட்டங்களின்போது சமூக ஊடகத்தில் எழுப்பப்படுவதுதான். அதற்கு ஆசிரியர் தரப்பில், இது தனிமனிதர் விருப்பம் சார்ந்த ஒன்று என்றும் அதைத் தடுக்க இயலாது என்பதாகவும் பதில் சொல்லி வருகின்றனர். இது குறித்து விகடன் வாசகர்களின் கருத்துகளை அறியவே இந்த சர்வே.