Ticker

6/recent/ticker-posts

காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்* 27-08-2019
*இன்றைய திருக்குறள்*

*குறள் எண் -794*

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
 கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.

✍மு.வ உரை:

உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும்.

✍கருணாநிதி  உரை:

பழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும் பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பை எந்த வகையிலாவது பெற்றிருப்பது பெரும் சிறப்புக்குரியதாகும்.

✍சாலமன் பாப்பையா உரை:

நல்ல குடியில் பிறந்து தன்மீது சொல்லப்படும் பழிக்கு அஞ்சு பவனின் நட்பை விலை கொடுத்தாவது கொள்ள வேண்டும்.

✡✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*

ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இந்ர்ஹ நான்கையும் முறித்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் அவைகள் உடையும் போது ஒலி எழுப்பாவிட்டாலும் பெரும்  வலியை ஏற்படுத்தும்.

   - சார்லஸ்

✳✳✳✳✳✳✳✳

*பழமொழி மற்றும் விளக்கம்*

*போக்கத்தவனுக்கு போலீஸ்காரன் வேலை. வாக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை*

நாம் அறிந்த விளக்கம் :

நிறைய பேர் இதை அறிந்திருக்க கூடும். உண்மையான விளக்கமும் தெரிந்திருக்கலாம். அதாவது சாதாரணமாய் படிக்கையில் போக்கிடம் இல்லாதவன் அல்லது வெட்டித்தனமாய் சுற்றுபவன் காவல் துறை அதிகாரிக்கும் எந்தவித பின்புலமும் செல்வமும் இல்லாதவன் வாத்தியார் வேலைக்கும் ஏற்றவர்கள் என்று அர்த்தம் கொள்ளும்படி ஆகி விட்டது. ஆனால் இது உண்மை விளக்கம் அல்ல.

விளக்கம் :

வார்த்தைகளை சற்று பிரித்து பொருள் கொண்டோமேயானால் இந்த உட்பொருள் சொல்ல வந்த விளக்கத்தை எளிதாக அறிந்து கொள்ளலாம். போக்கத்தவன்  போக்கு + கற்றவன் அதாவது ஒழுங்குகளை கற்றுக் கொண்ட மனிதன் போலீஸ் வேலைக்கு தகுதியானவன். வாக்கத்தவன் ஸ்ரீ வாக்கு + கற்றவன வாக்கு என்பது சத்தியம் அறிவு என்றெல்லாம் பொருள் கொள்ளப்படுகிறது. மொத்தத்தில் படித்தவன் அறிவு பெற்றவன் போன்ற தகுதிகளை கொண்டவன் கற்பித்தல் பணிக்கு தகுதியானவன். இதைக் கொண்டே சொல்லப்பட்ட பழமொழி மருகி திரிந்து மேற்கண்ட முறையில் வந்துவிட்டது.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*Important  Words*

 Pastry Roller அப்பளக் குழவி

 Bottle புட்டி, குப்பி

 Sack கோணி

 Churner மத்து

 Churn கடையும் பாத்திரம்

✍✍✍✍✍✍✍✍

*பொது அறிவு*

1.) இந்தியாவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டை?

*செயிண்ட் ஜார்ஜ் கோட்டை*

2) அமெரிக்காவில் புகழ்பெற்ற உயர்ந்த சிலை எது?

*சுதந்திர தேவி சிலை*

📫📫📫📫📫📫📫📫

*விடுகதை*

1. இளமையில் பச்சை !முதுமையில் சிகப்பு! குணத்திலே எரிப்பு!  நான் யார்?

*மிளகாய்*

2. நீரிலும் வாழ்வேன்! நிலத்திலும் வாழ்வேன்! நீண்ட ஆயுள் உடைய எனக்கு இறைவன் கொடுத்த கவசமும் உண்டு . நான் யார்?

*ஆமை*

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

*முயற்சி வேண்டும்*

ஒருநாள் தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் பறித்து மூட்டைக் கட்டி மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு அவற்றை விற்க நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அப்போது, சாலையின் ஒரு திருப்பத்தில் வண்டியின் ஒரு சக்கரம் பள்ளத்தில் போய் விழ, வண்டி சாய்ந்து விட்டது. கடவுளே! இது என்ன சோதனை? எனக்கு உதவி செய்! என்று அவன் மனமுருக வேண்டினான். கடவுள் உதவிக்கு வரவில்லை. இரண்டாம் முறை, மூன்றாம் முறையென பலமுறை கடவுளை உதவிக்கு அழைத்தும், அவர் வரவில்லை. வேறு யாரும் உதவிக்கு வரவில்லை.

கடைசியில், பள்ளத்தில் விழுந்திருந்த சக்கரத்தைத் தானே தூக்கி சாலையில் நகர்த்தி வைக்க முயற்சி செய்தான். என்ன ஆச்சரியம்? தனியாக தன்னால் தூக்க முடியாது என்று அவன் நினைத்திருக்க, எளிதாக சக்கரம் பள்ளத்திலிருந்து எழுந்து விட்டது. அப்போதுதான், அவன் தன் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு வழிப்போக்கன் சக்கரத்தைத் தூக்குவதில் உதவி செய்தது தெரிய வந்தது. அவனை வணங்கியவன் மிகவும் நன்றி ஐயா! கடவுள் செய்யாத உதவியை நீ செய்து விட்டாய்! என்றான்.

கடவுளே! உதவி செய்! என்று சொல்லியபடி கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தால், கடவுள் எப்படி உதவி செய்வார்? நீயே முயற்சி செய்தால்தான், கடவுள் உனக்கு உதவி செய்வார். அதற்கு நீதான் அவருக்கு, ஒரு வாய்ப்பு தர வேண்டும்! என்று கூறிவிட்டு அந்த ஆள் தன் வழியே நடந்தான்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
*தொகுப்பு*

T. தென்னரசு,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

*செய்திச் சுருக்கம்*

🔮கல்வி தொலைக்காட்சியை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்- முதலமைச்சர் பழனிசாமி பேச்சு.

🔮தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழக முதலமைச்சர் பழனிசாமி வரும் 28ம் தேதி வெளிநாடு பயணம்.

🔮ஜி-7 மாநாட்டில் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு.

🔮தீபாவளி பண்டிகையையொட்டி அக்டோபர் 25ம் தேதி சொந்த ஊர் செல்பவர்களுக்காக, அரசு பேருந்துகளில் ஆகஸ்ட் 27 முதல் முன்பதிவு தொடங்குகிறது.

🔮இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து அணி 382 ரன்கள் குவிப்பு.

🔮View NEET classes on TV as EPS launches new education channel .

🔮Will construct 100 new stadia in State: KA Sengottaiyan.

🔮Trump says India, Pakistan can handle Kashmir issue on their own.

🔮Jammu and Kashmir state flag removed from Secretariat, only tricolour to be hoisted from now.

🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪

🔮Delhi Government Sets Aside Rs 290 Crore For Free Ride To Women In Buses, Metro Trains.

Post a Comment

0 Comments