சென்னை: தமிழகத்தில் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து தான் இருசக்கர வாகனம் ஓட்ட வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், உடற்கல்வி ஆசிரியர்கள், ஒரு மணி நேரம் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என்றும், மாணவர்கள் பள்ளிகளுக்கு இருசக்கர வாகனம் ஓட்டி வந்தால் அனுமதிக்க கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.