பள்ளிகளில் சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மாணவர்கள் கயிறு கட்டியிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பள்ளிக்கல்வி துறை இயக்குநரின் சுற்றறிக்கை தனது கவனத்திற்கு வரவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். அத்துடன் பள்ளிகளில் வழக்கமான நடைமுறைகளே தொடரும் என்றும் சாதி, மத அடிப்படையில் கயிறுகள் கட்டப்பட்டுள்ளதா என அந்தந்த பள்ளிகளே சரிபார்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்

இந்நிலையில் அமைச்சர் தனது கருத்தில் திடீரென மாறி, பள்ளிகளில் சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.