புதுக்கோட்டை. ஆக.26:தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையால் தொடங்கப்பட்டுள்ள கல்வித் தொலைக்காட்சியின் தொடக்க விழா நிகழ்வுகளை புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியர்களுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி திங்கட்கிழமை கண்டுகளித்தார்.

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி கூறியதாவது: கல்வி தொலைக்காட்சியின் தொடக்கவிழாவானது சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற்றது.தொலைக்காட்சி ஒளிபரப்பினை மாண்புமிகு முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் துவக்கி வைத்தார்கள்.இந்நிகழ்ச்சியை மாணவர்கள்,ஆசிரியர்கள் காண்பதற்கு ஏதுவாக கல்வித் தொலைக்காட்சியில் பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது.தொடக்க விழா நிகழ்வினை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் 1628, உயர்நிலைப்பள்ளிகள் 171,மேல்நிலைப்பள்ளிகள் 171 என மொத்தம் 1970 பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவியர்கள் கண்டுகளித்தனர் என்றார்.