சென்னை: தமிழகத்தில் 131 இடங்களில் சாரணர் இயக்கம் செயல்பட இடங்களை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை மீனம்பாக்கத்தில் சாரண, சாரணியர் இயக்கத்தின் மாநில மாநாட்டில் அமைச்சர் செங்கோட்டையன் பேசி வருகிறார். சாரணர் இயக்க மாணவர்களுக்கு சீருடைகள், ஷுக்கள் வழங்குவது குறித்து முதல்வரிடம் பேசப்படும் என்று கூறியுள்ளார்.