GROUP 4 HALL TICKET  -CLICK HERE DOWNLOAD



சென்னை: டி.என்.பி.எஸ்.சி குரூப் -4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டது.
இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி வியாழனன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழக அரசில் விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 6491 குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை www.tnpscexams.net மற்றும் www.tnpscexams.in என்ற இணையதள முகவரிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஒருவேளை ஹால் டிக்கெட் இல்லை கிடைக்கவில்லை என்றால் தேர்வாளர்கள் தேர்வு கட்டணம் செலுத்திய ரசீதின் நகலை contacttnpc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஹால் டிக்கெட் தொடர்பாக ஆக.28 ம் தேதிக்கு பிறகு வரும் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது.
இவ்வாறு அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.