🕴🕴🕴🕴🕴🕴🕴🕴👩💻👩💻👩💻👩💻👩💻👩💻👩💻
*இன்றைய திருக்குறள்*
*குறள் எண்- 231*
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
✍மு.வ உரை:
வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.
✍
கலைஞர் உரை:
கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை.
✍சாலமன் பாப்பையா உரை:
ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை.
✡✡✡✡✡✡✡✡
*பொன்மொழி*
இலட்சியம் ஊக்கத்தை உருவாக்கும். ஊக்கத்தால் உயரிய எண்ணங்கள் மலரும். உயரிய எண்ணங்களால் உழைப்புத்திறன் பெருகும். உழைப்பு நற் செயல்களுக்கு ஆதாரமாகும்.
- அப்துல் கலாம்
♻♻♻♻♻♻♻♻
*Important Words*
Pot பாத்திரம், பானை
Button பொத்தான், பட்டன்
Ice Box ஐஸ் பெட்டி
Bucket வாளி
Brush தூரிகை
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*பழமொழி மற்றும் விளக்கம்*
*கழுதைக்குப் பரதேசம் குட்டிச்சுவர்*
நாம் அறிந்த விளக்கம் :
ஒரு குட்டிச்சுவரின் பக்கத்தில் நாள் முழுதும் நின்றுகொண்டு பொழுது போக்குவது கழுதைக்குப் புனித யாத்திரை போவது போல. இதுவே நாம் அறிந்த விளக்கம் ஆகும்.
விளக்கம் :
குறுகிய குறிக்கோள்களில் திருப்தி காண்பவர்களைக் குறித்துச் சொன்னது இந்த பழமொழி. இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.
📫📫📫📫📫📫📫📫
*விடுகதை*
1. கந்தல் துணி கட்டியவன் முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான்.
அது என்ன?
*சோளக்கதிர்*
2. காட்டிலே பச்சை; கடையிலே கறுப்பு; வீட்டிலே சிவப்பு. அது என்ன?
*மரம்- கரி- நெருப்பு*
✍✍✍✍✍✍✍✍
*பொது அறிவு*
1. யாருடைய பிறந்த நாளை ஆசிரிய தினமாக கொண்டாடுகிறோம்?
*டாக்டர் இராதாகிருஷ்ணன்*
2. டாக்டர் இராதாகிருஷ்ணனின் சொந்த ஊர் எது?
*திருத்தணி*
🗣🗣🗣🗣🗣🗣🗣🗣
*இன்றைய கதை*
*வேட்டை நாய்*
வேட்டைக்காரன் ஒருவன் இரண்டு நாய்கள் வளர்த்து வந்தான். அவற்றில் ஒரு நாய் அவனுடன் வேட்டைக்குச் செல்லும். மற்றொரு நாய் அவனது வீட்டைக் காவல் காத்துக்கொண்டிருக்கும்.
வேட்டைக்காரன் வேட்டைக்குச் சென்று திரும்பி வீட்டுக்கு வந்ததும், வேட்டையில் கிடைத்தை வீட்டு நாய்க்கே எப்போழுதும் அதிகம் கொடுப்பான். வேட்டை நாய் அதைப் பொருட்படுத்தவில்லை.
இதேபோல் தினமும் வேட்டையாடிவிட்டுத் திரும்பி வந்ததும், வீட்டு நாய்க்கே அதிகம் கொடுத்தான். அதைக் கண்ட வேட்டை நாய்க்கு அப்போதுதான் வருத்தம் ஏற்பட்டது.
வருத்தம் கொண்ட வேட்டைநாய், வீட்டு நாயைப் பார்த்து வேட்டையாடுவது எவ்வளவு கடினமான வேலை தெரியுமா? நான் வேட்டையில் சம்பாதித்து வருவதில் மட்டும் நீ அதிக பங்காகப் பெற்றுக்கொள்கிறாய். இது நியாயமா? என்று வருத்தத்துடன் கேட்டது.
அதைக் கேட்ட வீட்டு நாய் சிரித்துக் கொண்டே, நண்பனே! இதில் என்னுடைய தவறு எதுவுமில்லை. நீ என்மீது ஏன் வருத்தப்படுகிறாய். இந்தக் தவறு நம் எஜமானனுடையது. அவர் எனக்கு வேட்டையாடச் சொல்லித்தரவில்லை. மற்றவர் சம்பாதித்த பொருளில் பங்கு பெறத்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்! என்று பதில் கூறியது.
அதைக் கேட்டதும், வேட்டை நாய் எதுவும் பேசாமல், இந்த அநியாய உலகத்தில் நியாயத்தை எதிர்பார்ப்பது தவறு என்பதை உணர்ந்து அமைதியாகச் சென்றது.
நீதி:
நமக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு கற்றுத் தர வேண்டும்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
T.தென்னரசு,
TN டிஜிட்டல் டீம்,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*செய்திச் சுருக்கம்*
🔮 டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளான இன்று ஆசிரியர் தினமாக கொண்டாடும் நிகழ்வில் இன்று சிறந்த ஆசிரியர்களுக்கு தமிழக அரசு நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
🔮70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க பிஎஸ்என்எல் திட்டம்.
🔮லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு நடந்த வன்முறை போராட்டம் வருத்தமளிப்பதாக லண்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
🔮கார் விற்பனை குறைவு: 2 நாட்களுக்கு கார் உற்பத்தி தொழிற்சாலைகள் மூடல் -மாருதி நிறுவனம் அறிவிப்பு.
🔮ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் இணைவதால் தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது -அமைச்சர் செல்லூர் ராஜூ.
🔮அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 100-வது வெற்றியை பதிவு செய்த செரீனா வில்லியம்ஸ்.
🔮Eighteen people were killed and many injured in a blaze in a firecracker factory at Batala in Gurdaspur district of Punjab on Wednesday.
🔮Kartarpur corridor: India, Pakistan agree on visa-free travel of Indian pilgrims to gurdwara.
🔮India, Russia ink proposal on developing Chennai-Vladivostok sea route.
🔮. Foot ball.
India face strong Oman in opening World Cup Qualifiers.
🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..