பழைய பாடத்திட்டத்தில் தோல்வியுற்ற +1, +2 மாணவர்கள் அதே பாடத் திட்டத்திலேயே பொதுத்தேர்வு எழுதலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
கடந்த கல்வியாண்டுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மார்ச் 2020, ஜூன் 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்வுகளை பழைய பாடத்திட்டத்திலேயே எழுதலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.2020 ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை 12ஆம் வகுப்புக்கு பழைய பாடத்திட்டத்திலும், 2020ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை 11ஆம் வகுப்புக்கு பழைய பாடத்திட்டத்திலும் தேர்வு நடைபெறுகிறது.

Join Telegram Group Link -Click Here