ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் செப்.5 ஆசிரியர்கள் தின விழாவில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு கல்வி ஆசிரியரின் தன்னலமற்ற தொண்டுள்ளத்தோடு கூடிய சேவையை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி வட்டார வள மையம் சார்பில் அண்ணாநகர் (பாப்பாரப்பட்டி) நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் தின விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது.

வட்டார வள மைய மேற்பார்வையாளர் திரு.கே.கோதண்டபாணி தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவி திருமதி.பானுப்ரியா மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் திரு.குமரன் திரு.பார்த்தீபன் முன்னிலை வகித்தனர். 

நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியயை திருமதி.எஸ்.பாரதி மற்றும் உடன் ஆசிரியர்கள் திருமதி.விஜியலட்சுமி, திருமதி.சுமதி, திருமதி.ரேகா, திருமதி.கீதா, திருமதி.பாக்கியவதி, திருமதி.ராதிகா, திருமதி.சகாய புஷ்ப ராணி, சாந்தி, திருமதி.ரம்யா, மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் திருமதி.புளோரா சாந்தி, திருமதி.இளவரசி, திருமதி.சுமதி, ஆகியோர்களுக்கு சிறந்த ஆசிரியர்கள் என்று நினைவு பரிசு , பூங்கொத்து, எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.

மேலும் சிறப்பு நிகழ்வாக கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் (0-18வயது) 1 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு கல்வி மற்றும் உரிய வாழ்வியல் திறன் பயிற்சிகள் சிறப்பான வகையில் அளித்து பணியாற்றியமைக்கும் அனைத்து அரசு நலத்திட்ட உதவிகள் பெற தொண்டுள்ளத்தோடு ஆர்வத்தோடு செய்திட்டமைக்கும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான வட்டார வள மைய சிறப்பு பயிற்றுநர் திரு.ஜெ.அருண் குமார் அவர்களது பணியை கெளரவிக்கும் வண்ணம் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி வட்டார வள மைய மேற்பார்வையாளர் திரு.கே.கோதண்டபாணி அவர்கள் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் தெரிவித்து பேசியதாவது..

அன்பார்ந்த அனைத்து இருபால் ஆசிரியர்களுக்கு வணக்கம். 

இன்று ஆசிரியர் தின விழாவில்
 
நமது மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் சக மாணவர்களுக்குடன் இணைப்பு (நண்பர்கள் குழு) ஏற்படுத்தி தன்னம்பிக்கை கொள்ளவும், திறமையை வெளிக்கொண்டு வரவும்,

எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு அதிலிருந்து வெளிவருவதற்கான வழியை கண்டறியவும், 

மிகக் கடினமான சூழ்நிலையைக்கூட முன்னேறுவதற்கான வாய்ப்பாக காண்பதற்கும் 

சிறப்பு கல்வி ஆசிரியர்கள் (SS_IE_Special Educators) மாணவர்களுக்கு தூண்டுதலளிக்கிறார் என்ற உணர்வை ஏற்படுத்தி இப்பிறவியில் அடைய வேண்டிய இலக்கை நோக்கி தொடர்ந்து பயணிப்போம்........ 

மனித மனம் சார்ந்த விசயமாக இருப்பது உளவியல் .............. 

மனிதன் வாழும் மண் சார்ந்த விசயமாக இருப்பது உழவியல்......... 

இந்த உளவியல், உழவியல் என்ற இரு வேறுப்பாட்டினை புரிந்து அவசியத்தை உணர்ந்துகொள்ளும் மாணவர்களை தொடர்ந்து உருவாக்குவோம்...... 

பல படைப்பாளர்களை கண்டறிந்து உலகுக்கு அறிமுகம் செய்வோம்.......... 

ஆக்கமும் , ஊக்கமும் அளித்து மாற்றுத்திறன் மாணவர்களை சமுதாயத்தில் சிறந்த தலைவர்களை அடையாளம் காட்டுவோம்.

பிறப்பும் = இறப்பும் சமமானது என்ற உணர்வில் பாலினம்,சாதி, சமய,இனம்,மொழி, மதம் மற்றும் இதர வேறுபாட்டினை கலைத்து நல்லதோர் சமூக மாற்றத்தை ஏற்படுத்த அரும்பாடுபடுவோம்......

என்ற  உறுதிமொழியை ஏற்று கொள்வோம். எனக் கூறினார்


Join Whats App Group Link -Click Here


Join Telegram Group Link -Click Here