பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மாணவியர் மற்றும் ஆசிரியைகள் தங்களின் புகைப்படங்களை பதிவு செய்ய கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளதாக ஒரு வதந்தி பரவி வருகிறது
இந்த நிலையில் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. மாணவியர் மற்றும் ஆசிரியைகள் தங்களின் புகைப்படங்களை பதிவு செய்ய கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
மேலும் பள்ளி நிகழ்ச்சிகளில் எடுக்கப்படும் மாணவியர், ஆசிரியை சார்ந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட தடை ஏதும் இல்லை என்றும், சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவேற்ற பள்ளிக்கல்வித்துறை தடை விதித்ததாக வெளியான செய்திகள் உண்மைக்கு மாறானவை என்று பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் வாசு தகவல் அளித்துள்ளார்.


Join Telegram Group Link -Click Here