இந்த டிஜிட்டல் உலகில் நாம் அடிக்கடி மாற்றிக்கொண்டிருக்கும் ஒரு விஷயம் பாஸ்வேர்டு. காரணம், பாஸ்வேர்டை யாராவது திருடிவிட்டால் நம்முடைய ஒட்டுமொத்த அந்தரங்க வாழ்க்கையும் பேங்க் பேலன்ஸும் வெளியே கசிந்து விடும் என்ற பயம். இனி அந்த பயம் வேண்டாம். ஆம்; மெடிக்கல் செக்-அப்பைப் போல 'பாஸ்வேர்டு செக்-அப்'பை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.இதை சுலபமாக நம்மால் பயன்படுத்த முடியும். முதலில் குரோம் வெப் ஸ்டோருக்குள் சென்று 'பாஸ்வேர்டு செக்-அப்'பை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.

பிறகு அதை குரோம் பிரவுசருடன் இணைக்க வேண்டும். அவ்வளவுதான், உங்களின் பாஸ்வேர்டு பாதுகாவலன் தயார். இது குரோம் பிரவுசரில் மட்டுமே இயங்கும்.பிறகு நீங்கள் லாக்இன் செய்யும்போதெல்லாம் உங்கள் பாஸ்வேர்டு பாதுகாப்பானதா அல்லது யாராவது திருடிவிட்டார்களா என்று செக் செய்து சொல்லும்.இது முதல் வெர்ஷன்தான். ''பயனாளிகள் இதன் குறைகளைச் சொல்லும்போது பாஸ்வேர்டு செக்-அப்பின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் வெளிவரும்.'' என்கிறது கூகுள்.




Join Whats App Group Link -Click Here


Join Telegram Group Link -Click Here