காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10-10-2019
இன்றைய திருக்குறள்
குறள் எண்- 224
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.
மு.வ உரை:
பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது.
கருணாநிதி உரை:
ஈ.தல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும்.
சாலமன் பாப்பையா உரை:
கொடுக்க இருப்பவரின் நிலைகூட தம்மிடம் வந்து யாசித்து நிற்பவரின் மலர்ந்த முகத்தைக் காணும் வரை கொடியதே.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
கல்வி என்பது மனிதனின் ஆளுமையை வளர்ப்பதற்கு உதவுவதாக இருக்க வேண்டும். நமது சுய நலத்திற்கு மட்டும் பயன்படும் வகையில் இருக்க கூடாது.
- அப்துல் கலாம்.
✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம்
உடம்பைத் தூக்கிக் கடம்பில் போடு
விளக்கம் :
கடம்பு என்பது இங்கே கடம்ப மரத்தையும் கடம்ப மரத்தால் செய்யப்பட்ட கட்டிலையும் குறிக்கிறது. கடம்ப மரத்தால் செய்யப்பட்ட கட்டிலில் படுத்தால் உடல் நிலை எப்போதும் சீராக இருக்கும் என்பதே இதன் விளக்கம் ஆகும்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important Words
Dentist பல் மருத்துவர்
Diplomat விரகர், தானாதிபதி
Doctor மருத்துவர்
Dramatist நாடக கலைஞர்
Draftsman வரைவு எழுத்தர்
✍✍✍✍✍✍✍
பொது அறிவு
1. ஆரிய சமாஜ இயக்கத்தை தொடங்கியவர் யார்?
சுவாமி தயானந்தர்
2. இயன் மருத்துவ முறையில் பயன்படும் கதிர் வீச்சு எது ?
அகச் சிவப்பு கதிர்கள்
📫📫📫📫📫📫📫📫
விடுகதை
1.ஊரல்லாம் ஒரே விளக்கு. அதற்கு ஒரு நாள் ஓய்வு. அது என்ன?
சந்திரன்
2. உங்களுக்கு சொந்தமானட்து ஒன்று.. ஆனால் அதை உங்களை விடமற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள். அது என்ன?
நம்முடைய ”பெயர்”
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் ! விவசாயம்!
கோதுமை
🌾 கோதுமை உலகில் முதலில் பயிரிடப்பட்ட புல் வகையைச் சேர்ந்த தாவர வகைகளில் ஒன்றாகும்.
🌾 இதன் தாயகம் மத்திய கிழக்கின் லிவான்ட் பிரதேசம் மற்றும் எத்தோப்பிய உயர்நிலங்களாகும். எனினும் இன்று கோதுமை உலகெங்கும் பயிரிடப்படுகிறது.
🌾 இது உலகில் மக்காச்சோளம், அரிசிக்கு அடுத்து மூன்றாவதாக அதிகம் பயிரிடப்படுகிறத..
👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றைய கதை
சமாதானம் அவசியம்
காட்டில் மான் ஒன்று இறந்து கிடந்தது. அதை ஒரே சமயத்தில் சிங்கம் ஒன்றும், கரடி ஒன்றும் பார்த்தன. கரடி, நான் தான் முதலில் மானைப் பார்த்தேன். ஆகவே அது எனக்குச் சொந்தம் என்றது. ஆனால் சிங்கமோ.... நான் தான் முதலில் பார்த்தேன். ஆகவே இந்த மான் எனக்கேச் சொந்தம் என்றது.
இரண்டும், செத்துக்கிடந்த மான் யாருக்குச் சொந்தம் என நீண்ட நேரம் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தன. அதனால் இரு மிருகங்களும் சோர்வு மேலிட மயங்கின. அப்போது நரி ஒன்று அங்கு வந்து, இறந்து கிடந்த மானையும், அதற்காக சண்டையிட்டுக் கொள்ளும் சிங்கத்தையும். கரடியையும் பார்த்தது. இதுதான் சமயம் என நரி மானைத் தின்றுவிட்டு ஓடியது.
மயக்கம் தீர்ந்ததும் விழித்துக் கொண்ட கரடியும், சிங்கமும், நரி வந்து மானைத் தின்றுவிட்டுப் போனதை அறிந்தன. நாம் இருவரும் சமாதானமாய் போயிருந்தால், மானை பங்குப்போட்டு உண்டிருக்கலாம். நாம் சண்டையிட்டதால் வேறு ஒருவன் புகுந்து நம்மை ஏமாற்றிவிட்டானே என வருந்தின.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
செய்திச் சுருக்கம்.
🔮முடிவுக்கு வருகிறது தென்மேற்கு பருவ மழை- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
🔮2019 வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜான் பி.குடெனாப், ஸ்டான்லி விட்டிங்ஹாம் மற்றும் அகிரா யோஷினோ ஆகியோருக்கு இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
🔮உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் காலிறுதிக்கு இந்திய வீராங்கனை ஜமுவா போரோ முன்னேற்றம்.
🔮சீன அதிபர், பிரதமர் மோடி மாமல்லபுரம் வருகை: பாதுகாப்பு, விழா ஏற்பாடுகளை மேற்கொள்ள 34 சிறப்பு அதிகாரிகள் மற்றும் 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்.
🔮சிவகங்கை: வேளாண் தொழிலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக சிவகங்கையில் உள்ள பள்ளி மாணவர்கள் வயலில் இறங்கி நாற்று நட்டனர்.
🔮உலக சாம்பியன் பட்டம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கிய கேரள ஒலிம்பிக் சங்கம்.
HEADLINES
🔮Thank John D Goodenough, M. Stanley Whittingham and Akira Yoshino for the lithium-ion batteries that you use in everyday life from mobile phones to electric vehicles.
🔮Southwest monsoon starts withdrawing after delay of over one month.
🔮Pakistani drone was spotted twice in Indian territory first at Hazara Singh Wala village at 7.20 PM and then at Tendi Wala village at 10:10 PM.
🔮In a first, bank seizes 'seaplane' to recover dues.
🔮Anna University to help North-Eastern States build roads with drone technology.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..