இன்றைய திருக்குறள்
குறள் எண்- 467
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
மு.வ உரை:
(செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.
கருணாநிதி உரை:
நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்து முடிக்கும் வழியை அறிந்து தொடங்குக. தொடங்கியபின் அது பற்றி எண்ணிக் கொள்வோம் என்பது குற்றம்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து பிராத்தனை செய்து முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றிகள் விரைந்து வரும். இதுவே உண்மை.
- அப்துல் கலாம்.
✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம்
விண் பொய்த்தால் மண் பொய்க்கும்
விளக்கம் :
விவசாயத்திற்கு மழையையே நம்பியிருக்கும் காலத்தில் பருவ மழையை நம்பி பயிர் செய்வர். உரிய காலத்தில் வரவேண்டிய மழை பெய்யாமல் பொய்த்துப்போனால் பயிர் வளராமல் உரிய விளைச்சல் இல்லாமல் மண்ணும் பொய்த்துப்போகும்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important Words
1.Ankle - கணுக்கால்
2. Abdomen - வயிறு
3. Bone - எலும்பு
4.Cheek - கன்னம்
✍✍✍✍✍✍✍
பொது அறிவு
1. வால் நட்சத்திரத்தின் மறுபெயார் என்ன ?
எல்னோ
2.பஞ்சாபின் நாட்டிய நாடகம் எது ?
பாங்கரா
📫📫📫📫📫📫📫📫
விடுகதை
1. மட்டை உண்டு, கட்டை இல்லை; பூ உண்டு, மணமில்லை. அது என்ன?
வாழை மரம்
2. மூடாத வாய்க்கு முழ வால். அது என்ன?
அகப்பை
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் ! விவசாயம்!
வெண்டைக்காய்
🍕 வெண்டைக்காய் பருத்திச் செடியின் குடும்பத்தை சேர்ந்தது.
🍕 தாவரவியல்படி செம்பருத்தி ஹாலிஹாக் என்னும் பூச்செடி வகை. இந்த பூக்களின் அமைப்பும், வெண்டைக்காய் பூவின் அமைப்பும் ஒரே மாதிரியானவை.
🍕 வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா நாடு. அங்கிருந்து அரேபியா, நைல் நதியோர நாடுகள், பிறகு இந்தியா என்று அடுத்தடுத்து அறிமுகமாகியது.
🍕 கி.பி 1600களில் அடிமை வியாபாரம் தொடங்கிய கால கட்டத்தில் ஆப்பிரிக்கர்கள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலை நாடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.
🍕வெண்டைக்காய்க்கு வெப்பம் அதிகமுள்ள நிலமும் , பகல் மற்றும் இரவு இரண்டிலும் சூடான சூழ்நிலையும் அவசியம்.
🍕இளசாக இருக்கும் வெண்டை மென்மையாகவும், நீளமாகவும், நுனி கூராகவும் இருப்பதால் ஆங்கிலத்தில் இதை பெண்ணின் விரல் என்கிறார்கள்.
👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றைய கதை
மனித மனத்தின் ஆசை
இந்த உலகத்தையே ஆளுகின்ற அதிகாரம் என் ஒருவனுக்கு மட்டுமே கிடைக்கவேண்டும் என்று பேராசை கொண்டான் ஒரு மன்னன். தன் குருவிடம் சென்று அதற்கு வழியும் கூறுமாறு கேட்டான். குருஜி, மன்னனுக்கு புத்தி புகட்ட விரும்பினார். அவர் அரசனிடம், சொல்கிறேன். அதற்கு முன்பு எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்றார். அரசன் ஆவலுடன், சொல்லுங்கள்! சொல்லுங்கள்! என்றான். ஒன்றுமில்லை, இந்த செப்புக்குடுவையை உன்னால் முடிந்ததைக் கொண்டு நிரப்பித் தருவாயாக! என்றார்.
அட! இதென்ன பெரிய விஷயம் என்று எண்ணியபடியே, பணியாளரை அழைத்தான். அவரிடம், பொற்காசுகள் நிறைந்த பட்டுத்துணி மூட்டை ஒன்றைத் தந்து அந்தக் குடுவையை நிரப்பச் சொன்னான். அவரும் பொற்காசுகளை அந்தக் குடுவையில் கொட்டினர். குடுவை நிறையவேயில்லை! அது மிகவும் சிறியதுதான். போடப்போட பாதிக்குமேல் காலியாகவே இருந்தது. இன்னும் நிறையக் காசுகள் கொட்டப்பட்டன. அதுவோ நிறையாமலே இருந்தது.
குருஜி, என்ன அரசரே, இந்த சின்னக் குடுவையை நிறைக்க முடியவில்லையா? என்று கேலியாகக் கேட்டார். மன்னனுக்கு அவமானமாகிவிட்டது. கஜானாவிலிருக்கும் பொற்காசுகள், மற்றும் விலையுயர்ந்த மணிகள் எல்லாவற்றையும் கொண்டுவரச் சொன்னான். அனைத்தையும் போட்டாகிவிட்டது. அப்போதும் அந்த மாயப்பாத்திரம் நிறையவே இல்லை. கஜானாவும் காலியாகிவிட்டது. மன்னன் மனம் கலங்கினான். உடலும் உள்ளமும் ஓய்ந்து போனது.
ஐயா, இது என்ன மாயம்? என்ன பாத்திரம் இது? என் மொத்த கருவூலமும் காலியாகி விட்டதே! பாத்திரம் மட்டும் நிறையவே இல்லையே? என்று கலங்கிப்போய்க் கேட்டான். அரசே, இது மனித மனத்தின் ஆசை என்ற பொருளினால் செய்யப்பட்ட குடுவை! இதை நிரப்பவே முடியாது! ஆசைக்கு ஏது அளவு? என்றார். மன்னனுக்குப் புரிந்தது. அவன் குருவை வணங்கினான். மனம் தெளிவு பெற்றது.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
செய்திச் சுருக்கம்.
🔮தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகமுள்ள 10 மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு: சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி.
🔮காவிரி ஒழுங்காற்று குழுவின் அடுத்த கூட்டம் வரும் 31ம் தேதி திருச்சியில் நடைபெறும் என அறிவிப்பு.
🔮இந்தியாநாட்டில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3.5 லட்சம் கோடி செலவிட திட்டம் : பிரதமர் மோடி.
🔮சைனிக் பள்ளிகளில் இனி பெண் குழந்தைகளுக்கும் அனுமதி - ராஜ்நாத் சிங் ஒப்புதல்.
🔮பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் மற்றும் டி-20 கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் அகமது நீக்கம்.
HEADLINES
🔮 We will continue to partner with friends to confront any emerging threats: Army chief Bipin Rawat.
🔮Pakistan escapes terror blacklisting by FATF, given February 2020 deadline.
🔮Jaffna-Chennai air travel gets costlier with Sri Lanka tax .
🔮World's first female spacewalking team makes history.
🔮Waterlogging brings traffic to a crawl in Chennai.
🔮Citizens Entitled To Breathe": Green Tribunal Dismisses Plea To Use Diesel Generators.
🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..