தேசிய திறனாய்வு தேர்வுக்கு மாணவர்களுடைய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து அதில் மாணவர்களின் புகைப்படம் பெயர் தலைப்பெழுத்து பிறந்த தேதி முதலான விவரங்களை சரிபார்த்து ஒரு பொறுப்பாசிரியர் உடன் மாணவர்களை அனுப்பி வைக்குமாறு தலைமையாசிரியர்கள் கேட்டு கொள்ளப் படுகிறார்கள். மேலும் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் ஏதேனும் திருத்தம் இருப்பின் அதனை சரிசெய்து புகைப்படம் இல்லாமல் இருந்தால் ஒரு புகைப்படம் அதில் ஒட்டி கையொப்பமிட்டும் மற்றொரு புகைப்படத்தினை தேர்வு மையத்திற்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டு கொள்ளப் படுகிறார்கள். மாணவர்கள் கருப்பு நிற பந்து முனைப் பேனா BLACK BALL POINT PEN எடுத்துச்செல்ல அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். தேர்வு காலை 9 மணிக்கு துவங்க இருப்பதால் மாணவர்கள் 8 30 மணிக்கு முன்பாகவே தேர்வு மையத்திற்கு சென்று அடைய ஏதுவாக உரிய அறிவுரைகளை வழங்குமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..