2019 ஆம் ஆண்டு மருத்துவ கண்டுபிடிப்புக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

ஆராய்ச்சியாளர்கள் வில்லியம் ஜீ கேலின், சர் பீட்டர் ரேட்கிளிப் , கிரேக் எல் செமன்சா ஆகிய மூன்று பேருக்கும் மனித உடல் செல்கள் குறித்த ஆய்விற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூவரும் உடலில் இருக்கும் ஆக்சிஜன் அளவை பொறுத்து உடல் செல்கள் எப்படி மாறுகிறது, உடலில் ஆக்சிஜன் அதிகமாகும் நேரத்தில் என்ன நடக்கும், குறையும் நேரத்தில் என்ன நடக்கும் என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். எதிர்காலத்தில் புற்றுநோய் தொடர்பான சிகிச்சைகளுக்கு இந்த ஆய்வு மிகவும் உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது.

Join Telegram Group Link -Click Here