காலைவழிபாட்டுச் செயல்பாடுகள்
30-10-2019
இன்றையதிருக்குறள்
குறள் : 612
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
விளக்கம் :
செயலைத் தொடங்கிக் குறையாக விட்டவரை இவ்வுலகம் கைவிடும். ஆகையால், செயலில் முயற்சி இல்லாது இருத்தலைத் தவிர்க்க வேண்டும்.
குறள் விளக்க கதை:
ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார். தன்னுடைய நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களில் ஓரிடத்தில், ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார். அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார்.
பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேண்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். அதன்பின், அவர் குறிப்பிட்டிருந்த புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள்.
முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினார்கள். புதையல் எதுவும் கிடைக்கவில்லை. ஒருவேளை, அப்பா இரண்டடி என்று சொல்வதற்கு பதிலாக ஓரடி என்று சொல்லிவிட்டாரோ என்ற சந்தேகத்தில் பிள்ளைகள் மூவரும் சேர்ந்து, மூத்தவனின் நிலத்தை இன்னும் ஓரடி ஆழமாகத் தோண்டினார்கள். அப்போதும் அவர்களுக்குப் புதையல் கிடைக்கவில்லை.
எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில், இரண்டாவது மகனின் நிலத்தையும் இரண்டடி வரை தோண்டினார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது. இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும் என்று கடைசி மகனின் நிலத்தையும் இரண்டடி தோண்டினார்கள். மறுபடியும் ஏமாற்றமே.
அப்பா மேல் வருத்தம் வந்தாலும், அவர்கள் சரி தோண்டியது வீணாக வேண்டாம் என்று எண்ணி, அந்த நிலங்களில் விதை விதைத்தார்கள். நீர் பாய்ச்சினார்கள். உரம் போட்டார்கள். உழைப்பு வீண் போகுமா? ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம்.
இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள்.
நீதி :
எந்த செயல் எடுத்தாலும் அதை பாதியில் நிறுத்து விடாமல் விடாமுயற்சியுடன் செய்தால் கண்டிபாக பலன் கிடைக்கும்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
கனவுகள் எல்லை எனில், புரட்சிகரமான சிந்தைனைகள் இல்லை. சிந்தனைகள் இல்லையேல் செயல்பாடுகள் இல்லை. தொழில் நுட்பம் மற்றும் மரபுவழி செயல்களைக் கொண்ட ஒட்டு மொத்த அணுகுமுறையே தேசத்தின் வளர்ச்சியில் வளமான நிறைவைத் தரும்.
- அப்துல் கலாம்
✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம்
இஞ்சி தின்ற குரங்கு போல
விளக்கம் :
இஞ்சியைப் போன்ற தோற்றமுள்ள காட்டு மஞ்சள் கிழங்கின் மீது குரங்குக்கு மிகுந்த விருப்பம். இது மாங்காய் இஞ்சியைப் போன்றது. காரமில்லாதது சற்று இனிப்பும் அதில் இருக்கும். அதை ருசி கண்ட குரங்கு அதுபோலவே தோன்றும் சாதாரண இஞ்சியைக் கண்டு ஏமாந்து கடித்துச் சுவைத்து விடும். அப்போது ஏற்படும் அதன் முகபாவத்தையும் கோபத்தையும் குறிப்பது தான் இந்தப் பழமொழி.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important Words
1. Father - in - law - மாமனார்
2. Daughter -in-law - மருமகள்
3. Mother-in-law - மாமியார்
4. Foe - எதிரி
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு
1. சேக்கிழாருக்கு எங்கு கோயில் உள்ளது ?
குன்றத்தூர்
2. நவீன வானவியலின் தந்தை யார் ?
நிகோலஸ் கோபர்னிகஸ்
📫📫📫📫📫📫📫📫
விடுகதை
1.பொட்டுப் போல இலை இருக்கும், குச்சி போல காய் காய்க்கும். அது என்ன ?
முருங்கை
2. காகிதத்தைக் கண்டால் கண்ணீர் விடும். முக்காடு போட்டால் மூலையில் அமரும். அது என்ன?
பேனா
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!
அவரைக்காய்
🍡 இந்தியா போன்ற தெற்காசிய பகுதிகளில், குறிப்பிட்ட காலநிலையில் வளரக்கூடிய கொடி வகை தாவரம் அவரை.
🍡 விவசாயம் பழகிய காலத்திலிருந்தே இந்த காய்களை உண்ணும் பழக்கம் இருந்திருக்கிறது. இலக்கியங்களிலும் அதற்கான சான்றுகள் உண்டு. அவரைக்காயில் ஏராளமான வகைகள் உண்டு.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
செய்திச்சுருக்கம்.
🔮சுஜித் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சமும், அ.தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சமும் வழங்கப்படும் - முதல் அமைச்சர் பழனிசாமி.
🔮ராஜராஜ சோழனின் 1034வது சதய விழா; தஞ்சையில் நவம்பர் 6ந்தேதி கொண்டாடப்படுகிறது.
🔮இந்தியர்களின் மூளை சிறியது ஆய்வில் தகவல்.
ஐதராபாத் ஆய்வாளர்கள் ஆராய்ச்சியாளர்கள் முதன்முதலில் இந்தியர்களின் மூளை அட்லஸை உருவாக்கியுள்ளனர்.
🔮3 நாட்களில் 1,100 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளன - திருவள்ளூர் ஆட்சியர் மகேஷ்வரி தகவல்.
🔮பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி: முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்விடோலினா, சிமோனா ஹாலெப் வெற்றி.
🔮இந்தியாவிலேயே முதல் முறையாக விவசாயிகளின் வருமானத்தை பெருக்க சட்டம் இயற்றியது தமிழக அரசு.
HEADLINES
🔮 No move to merge Yanam with Andhra Pradesh, says Kiran Bedi.
🔮Borewell death: TN to convert all dry wells into rainwater harvesting structures.
🔮India’s first ever day-night Test to be against Bangladesh in Kolkata.
🔮Questions grow over NGO’s invitation to European Union parliamentarians.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..