சென்னை:உதவி பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிக்கப் பட்டுள்ளது. பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கு, முதுநிலை பட்டதாரிகள், நெட் அல்லது செட் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். நெட் தேர்வு, தேசிய அளவிலும், செட் தேர்வு மாநில அளவிலும் நடத்தப் படுகிறது.இந்த ஆண்டுக்கான நெட் தேர்வு, டிசம்பரில் நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, ஏற்கனவே துவங்கியது. அக்., 9ல் விண்ணப்ப பதிவு முடிவதாக இருந்தது. இந்நிலையில், வரும், 15ம் தேதி வரை நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. விபரங்களை, https://csirnet.nta.nic.in/ என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


Join Telegram Group Link -Click Here