அக்டோபர் 26 மற்றும் 27ஆம் தேதி பள்ளிகளுக்கு தீபாவளி விடுமுறை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தீபாவளிக்கு முந்தைய நாளான வரும் 26ஆம் தேதி பள்ளி வேலைநாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தீபாவளிக்கு ஒருநாள் மட்டுமே விடுமுறை கிடைத்தது.

இந்த நிலையில், அக்டோபர் 26, 27 பள்ளிகளுக்கு தீபாவளி விடுமுறை என்றும், அக்டோபர் 28ஆம் தேதி தேவைப்பட்டால் உள்ளூர் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அக்டோபர் 28ஆம் தேதி பள்ளி வேலை நாள் என்பதால், விடுமுறை தேவைப்படும் பள்ளிகள் மட்டும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் அனுமதி பெற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கலாம் என்றும், அக்டோபர் 28 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கும் பள்ளிகள் ஏதாவது ஒரு சனியன்று வேலை நாளாக அறிவித்துக்கொள்ளலாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. சொந்த ஊர் சென்று திரும்பும் மாணவர்களுக்காக கூடுதல் விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Join Telegram Group Link -Click Here