சர்வதேச அளவில் உயரிய விருதாக நோபல் பரிசு கருதப்படுகிறது. ஆல்பிரட் நோபலின் நினைவாக வழங்கப்படும் இப்பரிசு ஆறு துறைகளுக்கு அளிக்கப்படுகிறது. இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று மிசெல்மேயர் மற்றும் டிடையர் குயல்ஸுக்கு சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள்கள் குறித்த ஆய்வுக்காகவும் ஜேம்ஸ் பீபல்சுக்கு பேரண்டம் குறித்த ஆராய்ச்சிக்காகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நோபல் பரிசு
அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் பீப்லஸுக்கு அண்டவியலில் புதிய தத்துவார்த்த கண்டுபிடிப்புக்கும் பிரபஞ்சத்தைப் பற்றி ஒரு புதிய புரிதலைக் கொண்டு வந்ததற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சார்ந்த வானவியல் ஆராய்ச்சியாளரான மிசெல் மேயர் மற்றும் டிடையர் குயல்ஸ் ஆகியோருக்கு சூரிய மண்டலத்துக்கு வெளியில் உள்ள ஒரு கோளைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. 5 1 pegasi b என்று பெயரிடப்பட்ட அந்தக் கோள் சூரிய குடும்பத்திலிருந்து 50 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது.
இக்கண்டுபிடிப்புகள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் ``பிரபஞ்சத்தைப் பற்றிய கண்டுபிடிப்பும் வெளிக்கோல் கண்டுபிடிப்பும் அண்டவெளியில் ஆராய்ச்சி செய்வதற்கான புதிய வழிகளைக் காட்டுகிறது. இன்னும் பிரபஞ்சம் பல மர்மங்களைத் தன்னுள் அடக்கி வைத்துள்ளது'' என்று கூறுகின்றனர்.
ஆராய்ச்சி
நோபல் பரிசுடன், ஒன்பது மில்லியன் ஸ்விஸ் குரோணர் அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூபாய் 6,47,36,688 பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது. இதில் ஒரு பாதி ஜேம்ஸ் பீபல்ஸுக்கும், மீதி தொகை மிசெல் மேயர் மற்றும் டிடையர் குயல்ஸ் ஆகியோருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Join Telegram Group Link -Click Here