காலை வழிபாட்டுச்  செயல்பாடுகள்
26-11-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்- 204

அதிகாரம் : தீ வினையெச்சம்

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.

மு.வ உரை:

பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்.

கருணாநிதி  உரை:

மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது; அப்படி நினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு விடும்.

சாலமன் பாப்பையா உரை:

மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

பிரபஞ்சம் என்னும் மகத்தான் புத்தகம் நம் முன்னே விரிந்து கிடக்கிறது. அதை படித்து அறிவை விசாலப்படுத்துங்கள்.
 - சுவாமி விவேகானந்தர்.
✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம்
அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.

விளக்கம் :

சைவ மிருகங்களில் பெரிதான யானைக்கு உணவளித்து தாக்குப்பிடிப்பது கடினம். அது அசைந்து அசைந்து சாப்பிட்டுக்கொண்டே இருக்கும். அதனால் உணவு சீக்கிரமாகவே தீர்ந்துவிடும்.
ஆனால் வீட்டில் உள்ளவர்கள் வேலை செய்யாது (அசையாது) சம்பாதிக்காமல் சாப்பிட்டுக்கொண்டே இருந்தால் எவ்வளவுதான் சொத்து இருந்தாலும் மிக விரைவில் சொத்துகள் தீர்ந்துவிடும்.

எனவே தேவைக்கு ஏற்ப உழைத்து சம்பாதித்து சாப்பிட வேண்டும்..
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1. Affection -  அன்பு, பாசம்
2. Agent - முகவர்
3. Alias - புனைப்பெயர்
4. Aliment - உணவு

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1.வெஸ்ட் இண்டீஸ் தீவுகளில் மிகப்பெரிய தீவு எது ?

 ஜமைக்கா

2. சட்லெஜ் நதி எந்த ஏரியில் இருந்து உருவாகிறது ?

 மானசரோவர்

📫📫📫📫📫📫📫📫
விடுகதை

1. தண்ணீர் இல்லாமல் வளரும் , தரை இல்லாமல் படரும். அது என்ன ?

 உரோமம்

2. நன்றிக்கு வால், கோபத்துக்கு வாய், அது என்ன ?

 நாய்

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!

பச்சைப்பயறு

🍊 இதன் தாயகம் இந்தியா மற்றும் ஆசியா என்று கூறப்படுகிறது.

🍊 இதன் தாவரவியல் பெயர் லிக்னோ ரேடியேட்டா என்பதாகும். லெகூமினேசியா என்ற குடும்பத்தைச் சார்ந்தது.

🍊இந்தியாவில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. தமிழர்களின் சமையலில் பச்சைப்பயறு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

உதவிக்குக் கிடைத்தப் பரிசு

ஒரு நாள் பாம்பு ஒன்று குளிர்காலப் பனியில் விரைத்து சுருண்டு கிடந்தது. அந்த சமயத்தில் அவ்வழியே வந்த குடியானவன் அப்பாம்பிற்கு உதவ நினைத்து அப்பாம்பினை எடுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டான். குடியானவனுடைய உடல் சூடு பட்டதும், பாம்பு மெல்ல மெல்ல உணர்வு பெற்றது. அதற்கு நன்றாக உணர்வு வந்ததும், அது தன்னைக் காப்பாற்றிய குடியானவன் மார்பைப் பலமாகக் கடித்தது. பாம்பின் நஞ்சு ஏறி உயிர் போகும் நிலையில் இருந்த குடியானவன் தன் செய்கைக்காக வருந்தினான். குடியானவன் அப்பாம்பைப் பார்த்து உன் குணம் தெரிந்தும் நான் உனக்கு உதவி செய்ததற்கு எனக்கு மிகச்சரியான தண்டனை கிடைத்திருக்கிறது என்றான்.

நீதி :
கேட்காமல் செய்யும் உதவி ஒரு சமயம் உனக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடும்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮பொறியியல் படிப்பில் கலந்தாய்வு வழியாக சேரும் மாணவர்களுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

🔮முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வாட்லிங் இரட்டை சதத்தால் நியூசிலாந்து அணி 615 ரன்கள் குவித்தது. தோல்வியை தவிர்க்க இங்கிலாந்து அணி போராடி வருகிறது

🔮குரூப் 4 பணியிடங்கள் எண்ணிக்கை 6491-ல் இருந்து 9398 ஆக அதிகரிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

🔮நெல்லை உட்பட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; 28, 29ல் சென்னையில் கனமழை!


🔮நேரடியாக பிளஸ் 2 தேர்வு: தமிழக அரசின் கல்வித்துறை ஒப்புதல்.

🔮தஞ்சையில் மீண்டும் விமான நிலையம்: 2020 முதல் சென்னை, பெங்களூருக்கு இயக்க திட்டம்

HEADLINES

🔮BSNL is looking at savings of about Rs 7,000 crore in wage bill, if 70,000-80,000 personnel opt for the scheme.

🔮Onion prices in Chennai touch Rs 120 per kg for the first time in almost a decade.

🔮Kidambi Srikanth pulls out of PBL to focus on international events.

🔮TN will continue to have full control of Mullaiperiyar dam: Gajendra Shekhawat.

🔮Indian Army to deploy Spike anti-tank missiles on LoC