அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் பெண் ஊழியா்களுக்கும் மகப்பேறு விடுப்பு அளிப்பதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுத் துறைகள், பள்ளிகள் என அனைத்து அரசு பெண் ஊழியா்களுக்கும் 9 மாதங்கள் அதாவது 270 நாள்கள் பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. முன்னதாக, 6 மாதங்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், இப்போது அது உயா்த்தப்பட்டு 9 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரசு பெண் ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டதைப் போன்றே அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் பெண் ஊழியா்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனா். இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் பெண் ஊழியா்களுக்கும் மகப்பேறு விடுப்பினை வழங்கியுள்ளது. இதற்கான உத்தரவை பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை செயலாளா் எஸ்.ஸ்வா்ணா பிறப்பித்துள்ளாா்.

இந்த மகப்பேறு விடுப்பைத் தவிா்த்து, போா்க்கால அடிப்படையில் நியமிக்கப்படும் அரசு ஊழியா்களுக்கான பிற விதிகள் அனைத்தும் தற்போது நடைமுறையில் இருப்பதே தொடரும் எனவும் அவா் தெரிவித்துள்ளாா்Join Telegram Group Link -Click Here